இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செம்படவன்காடு கிராமத்தில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென புவனேஸ்வரி வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு […]
