திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]
