அரிசி இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதால் ரேஷன் கடை ஊழியருக்கு 26,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அகரதிநல்லூர், இளவங்கார்குடி, விளம்பல், தியானபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளில் எடை எந்திரம் சரியாக இயங்குகின்றதா? எனவும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் […]
