Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கடையில் எலி பிரியாணி தின்பது போல் பரவி வந்த வீடியோ”…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு…!!!!

பிரியாணி கடை ஒன்றில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி தின்பதுபோல் வீடியோ இணையத்தில் பரவி வந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் உணவு பரிமாறும் பாத்திரத்தில் எலி பிரியாணி சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் நேற்று முன்தினம் பரவி வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஆய்வு செய்த பொழுது அந்த கடையில் சமையலறை, உணவு சாப்பிடும் இடம், உணவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள்”… விவசாயிகள் சாலை மறியல்…!!!!

நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள் நடப்பதால் சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருக்கும் மார்க்கெட் கமிட்டியில் அங்குள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றார்கள். அங்கு முதலில் கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகள் உள்ளே அடுக்கப்பட்டு கடைசியாக வருபவர்களின் மூட்டைகள் வெளியே அடுக்கப்பட்டு முதலில் கடைசியாக கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகளை எடை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கியவர் பிணமாக மீட்பு… இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீஸ் விசாரணை…!!!

வெம்பாக்கம் அருகில் ஏரியில் மூழ்கிய நபரை தீயணைப்புத்துறையினர் பிணமாக மீட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் இருக்கின்ற ஏரியில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் செய்யாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய நபரை பிணமாக மீட்டுள்ளனர். இத்தகவலை அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர் சம்பவம் இடத்திற்கு வந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரியாணி கடையில்…எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி… சமூக வலைதளங்களில் வைரலாக பரவல்…!!!

பிரியாணி கடை பாத்திரத்தில் இருக்கும் எஞ்சிய உணவை எலி சாப்பிடும் காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தாலுகாவில் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிறைய பிரியாணி கடைகள் இருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பிரியாணியை வைத்து பரிமாறும் பாத்திரத்தில் இருக்கின்ற எஞ்சிய உணவை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்து ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் போட்டு விட்டார். இந்த வீடியோ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கரும்பு பாரத்துடன் கவிழ்ந்த டிராக்டர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கரும்பு பாரத்துடன் டிராக்டர் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சோகத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்து கரும்புகளை ஏற்றி கொண்டு டிராக்டர்ஓன்று கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. இதனை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேத்துப்பட்டு சாலையில் திரும்பும் போது திடீரென டிராக்டர் டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?… சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!!

விவசாயி சவக்குழிக்குள் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் வைத்து மாதம்தோறும் விவசாயிகள்  குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்  மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது நேரில் சென்று விசாரணை  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி விவசாயியான ராமன் என்பவர் சவக்குழிக்குள் படுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு” உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் கருப்பன் -காசியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்களது குடிசை வீடு மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து தகவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆட்டோ…. திடீரென நடந்த கோர விபத்து…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாங்கால் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 11 பெண்  தொழிலாளர்கள் பாவூர் பகுதி  சாலையில் ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேரை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் உத்தரவு…. “விடுமுறை நாளான சனிக்கிழமையில் செயல்பட்ட 3 சார்பதிவாளர் அலுவலகங்கள்”…!!!!

சனிக்கிழமையான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டது. வேலைக்கு செல்லும் மக்களும் பயன்பெறும் வகையில் வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமையில் பத்திர பதிவு மேற்கொள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி முதலில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இணை-2, சிங்கம் மற்றும் ஆரணி ஆகிய 3 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கியது. இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட சார்பதிவாளர் திருபுரசுந்தரி கூறியுள்ளதாவது, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சுற்றுலா வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. கோர விபத்தில் 3 பேர் பலி…. தி.மலையில் பரபரப்பு…!!

சுற்றுலா வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பால் பவுடர் நிறுவனம் அருகே தர்மபுரியில் இருந்து சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுலா வேனும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பரமசிவம், பிரபு, மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற நகரமன்ற கூட்டம்…. ரூ.40 கோடி செலவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை…. கலந்து கொண்ட உறுப்பினர்கள்….!!

நடைபெற்ற நகரமன்ற கூட்டத்தில் ரூ.40 கோடியில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவத்திபுரம் நகராட்சியில் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் தலைமையில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் என்.ரகுராமன், துணைத்தலைவர் குல்சார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன், நகரமன்ற உறுப்பினர்கள் வார்டுகளின் அடிப்படை தேவைகளை பொறுத்து முன்வைத்த கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திருவத்திபுரம் நகராட்சியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ரூ.40 கோடி அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கோலம் போட்டு கொண்டிருந்த தாய்” மகன்களுக்கு நடந்த உச்சக்கட்ட கொடூரம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் கான்கிரீட் மேற்கூரை  இடிந்து விழுந்து 16 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-2 படிக்கும் வினோத்குமார் மற்றும் பிளஸ்-1 படிக்கும் தினகரன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வி எழுந்து தனது விட்டு  வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் பயங்கரமான சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரம் வேணுமா….. “ரூ 2,500 லஞ்சம் கொடு”… வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளர் கைது… லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி..!!

ரூ 2500 லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி சங்க அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள்(63). இவர் வந்தவாசி காந்தி ரோட்டில் உள்ள வீட்டு வசதி சங்கத்தில் கடந்த 1997-ஆம் வருடம் வீட்டு பத்திரத்தை  அடமானம் வைத்து  ரூ 70,000 கடனாக வாங்கி உள்ளார். கடந்த 2012ஆம் வருடம் பெருமாள் கடனை திருப்பி செலுத்தி உள்ள நிலையில், அடமான பத்திரம், […]

Categories
கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவியை மானபங்கம் செய்த இளைஞர்”… போக்சோ சட்டத்தில் கைது…!!!

மாணவியை மானபங்கம் செய்த இளைஞனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் காந்தி என்பவரின் 19 வயதுடைய மகன் பவன்குமார். இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றார். இவருடைய அக்கா கால்பந்தாட்ட வீராங்கனை. இவரின் அக்காவுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனையான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் விளையாட்டு போட்டிகளின் மூலமாக பழக்கம் ஏற்பட்டு தோழிகளாக உள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் தொடர்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற டாக்டரின் தம்பி”…. பரிதாபமாக உயிரிழப்பு…!!!!

ஆரணியில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு மருந்தாளர் தற்கொலைக்கு முயற்சித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருணகிரி சத்திரம் பகுதியில் வாழ்ந்து வந்தவர் பாஸ்கர். இவர் ஆரணியில் உள்ள புது மசூதி தெருவில் இருக்கும் இவருடைய அண்ணன் நக்கீரன் ஆஸ்பத்திரியில் மருந்து கடை நடத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டதால் மருந்து கடையை விட்டு விட்டு அதே ஆஸ்பத்திரியில் இருக்கும் மருந்துக்கடையில் மருந்தாளராக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரின் அண்ணன் டாக்டர் நக்கீரன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“துணி வியாபாரியை கொலை செய்த 5 பேர்”… பாய்ந்தது குண்டாஸ்…!!!!

வியாபாரியை கொலை செய்த 5 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பட்டேல் அப்துல் ரசாக் தெருவில் வாழ்ந்து வந்தவர் முகமத் என்ற துணி வியாபாரி. இவர் சென்ற மார்ச் 4ம் தேதி நல்லவன்பாளையத்தில் அவரின் நண்பர்களுடன் இரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த திருவண்ணாமலையில் உள்ள தென்னை மர தெருவைச் சேர்ந்த சையது முகமது தரப்பினருக்கும் முகம்மத் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பின் முகமத் மற்றும் அவருடைய நண்பர்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஏரியை ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி”… பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்…!!!

ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடிசெய்ததை அகற்றும் பணியானது நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் தாலுக்கா ஆராஞ்சி ஊராட்சியில் இருக்கும் ஏரி 97 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த ஏரியானது ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அந்த ஏரியின் 40 ஏக்கர் பரப்பளவை அங்கு சுற்றி இருக்கும் மக்கள் ஆக்கிரமித்து நெல், கரும்பு சாகுபடி செய்து வந்தார்கள். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் கீழ்பெண்ணாத்தூர் துணை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர்”…. போக்சோ சட்டத்தில் கைது…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகின்றாள். அதே பகுதியில் வசித்துவரும் மார்பின்சிரில் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனிடையே அதே பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவனும் அந்த மாணவியை சென்ற ஜனவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. லாரியின் சக்கரத்தில் சிக்கிய பரிதாபம்…. திருவண்ணாமலையில் கோர விபத்து….!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செ.நாச்சிபட்டு கிராமத்தில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செ.நாட்சிபட்டு கிராமத்தில் இருந்து செங்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரசாத் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார். இந்நிலையில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதி பிரசாத் தூக்கி வீசப்பட்டு லாரியில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடக்க இருந்த திருமணம்…. மணமகள் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுகாமூர் பகுதியில் 25 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்த நிலையில் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் தங்கி வந்துள்ளார். அந்த பெண்ணை அவரது பெற்றோர் சமாதானம் செய்து அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆரணி நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மூதாட்டி…. ஏரியில் பிணமாக மீட்பு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மாயமான மூதாட்டி ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல்சீசமங்கலம் பகுதியில் மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதனால் மேரியின் மகன் சகாயநாதன் உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டிலும் தேடி வந்துள்ளார். ஆனால் மேரி கிடைக்காததால் சகாயநாதன் ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நோயால் அவதிப்பட்டு வந்த பெண்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தூரில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மிக்கேல், ரேஷ்மா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நந்தினி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் நந்தினி சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காததால் மனமுடைந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாணவியை கடத்தி சென்ற தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

பிளஸ்டூ மாணவியை கடத்திய தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் 17 வயது மாணவியை ராட்டினமங்கலம் கிராமத்தில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆரணி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆட்டோ-கார் மோதல்…. விபத்தில் சிக்கிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!

ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தேரி கிராமத்தில் ஐஸ்வர்யா, விந்தியா, சுவாதி ஆகிய 3 பேரும் ஆரணியில் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் ஆரணியில் உள்ள ஜவுளி கடையில் வேலை செய்கின்றனர். இந்நிலையில் நெசல் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் உள்பட 4 பேர் ஆரணி பகுதியில் வசிக்கும் ஸ்ரீதர் என்பவருடைய ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சந்தைமேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தைமேடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் செங்குணம் பகுதியில் வசிக்கும் ஜான்பாஷா என்பதும் அவர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொழிலாளி தவறவிட்ட பர்சை… மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்… துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு…!!

தொழிலாளி தவறவிட்ட பர்சை மீட்டு ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகில் அழகுசேனை பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன் (40). இவர் தச்சு தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் நேதாஜி மார்க்கெட்டில் பொருள் வாங்குவதற்காக நியூ சிட்டிங் பஜார் ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவருடைய பர்ஸ் தவறிவிட்டது. அந்த பர்ஸில் ரூ 11,000 மற்றும் ஏ.டி.எம், பான் கார்டு இருந்தது. இதுதொடர்பாக புருஷோத்தமன் வேலூர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லரைபாடி பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நதியா கணவரிடம் கோபித்து கொண்டு திருவண்ணாமலை டவுன் பே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன் கோவில் தெரு பகுதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் நீப்பத்துறைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொட்டக்குளம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அனிதாவை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொட்ட குளம் கிராமத்தில் பவன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பபினேஷ், அபினேஷ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக நர்மதா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் நர்மதாவை உடனடியாக மீட்டு செங்கம் அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சந்தவாசல் காவல்துறையினருக்கு சித்தூர்-போளூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் வடுகசாத்து கிராமத்தில் வசிக்கும் வினோத் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட நிலப்பிரச்சினை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழையூர் கிராமத்தை பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்டகாலமாக நிலத்தில் செல்லும் பாதையில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது. இதனால் மனமுடைந்த பழனி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் உடலை கைப்பற்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போன் போட்டு அழைத்து… கல்லூரி மாணவரை அடித்து கொலை செய்ய முயற்சி… 4 பேரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவரை தாக்கி கொலை செய்ய முயன்ற சென்னையை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் ஜனார்த்தனன். இவருடைய மகன் 20 வயதுடைய பாபு. இவர் செய்யாறு பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டராகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 42 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்… கொன்றது யார்?… வனத்துறையினர் விசாரணை..!!

கலசபாக்கம் அருகே ஏரியில் மர்மமான முறையில் ஏழு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே  காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள், 4 பெண்கள் உட்பட 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. இதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்துள்ளார். அப்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு நாளைக்கு 10 பேர் தான் வரனும்… அரசு மருத்துவமனையில்.… மாற்றுத்திறனாளிகள் திடீர் ஆர்ப்பாட்டம்..!!

அரசு ஆஸ்பத்திரியின் முன் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்தில் பயணிக்க இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் உதவிக்கு செல்லும் பயனாளிகளுக்கும் அரசு பேருந்தில் கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரயிலில் பயணம் செய்ய அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்கள் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். இந்நிலையில் அந்த அடையாள அட்டையை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் கிராமத்தில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயகுமார் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் செலவு செய்து மது அருந்தியுள்ளார். இதனால் பெற்றோர்கள் விஜயகுமாரை கண்டித்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த விஜயகுமார் விஷத்தை குடித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் விஜயகுமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அருணகிரிசத்திரம் பகுதியில் வசிக்கும் நந்தகுமார் என்பதும், மேலும் கஞ்சா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 24-ந் தேதி காஞ்சனா வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காஞ்சனாவின் சேலையில் தீப்பிடித்தது. இதனால் உடல்முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காஞ்சனா அலறியுள்ளார். அந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காஞ்சனாவை உடனடியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காணாமல் போன பள்ளி மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. டிரைவர் போக்சோவில் கைது….!!

பள்ளி மாணவியை கடத்தி சென்ற டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கார்ணாம்பூண்டி வசூர் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர் இதுகுறித்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தானிப்பாடியை அடுத்த மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் ராஜீவ்காந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் 300 கிராம் கஞ்சா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாங்கால் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இருவருக்கு சாந்தி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 4 வருடங்களாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாங்கால் சாலையில் சாந்தி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென சாந்தி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்தகாயமடைந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பொதுமக்களை அச்சுறுத்தி தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பையூர் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் தச்சூர் கிராமத்தில் வசிக்கும் அஜித்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாராய தொழிலில் ஈடுபட்ட பெண்…. பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சாராய தொழிலில் ஈடுபட்ட பெண்ணை குண்டர் சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டைகிரிபாளையம் பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சாந்தி சாராய தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் சாந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சாந்தியால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் போலீஸ் சூப்பிரண்டு பவுன்குமார் ரெட்டி அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்பேடு கிராமத்தில் சேத்துப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் நம்பேடு கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜேஷ்குமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தண்ணீர் டேங்க் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வடமாவந்தல் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டேங்க் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் சைக்கிளில் தண்ணீர் திறந்துவிட சென்று கொண்டிருந்தார். அப்போது அப்துல்லாபுரம் மோரணம் சாலையில் முருகன் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

கஞ்சா விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம்-போளூர் சாலையில் சேத்துப்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தேவிகாபுரம் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஏந்தல் பைபாஸ் ஜங்ஷன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அண்ணாமலை நகர் பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பதும், மேலும் அவர் 1\2 கிலோ கஞ்சா வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற ராணுவவீரர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இராணுவவீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் விடுமுறைக்கு சத்யராஜ் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு தனது மனைவியை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த பெண்…. வழிமறித்து கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணம்பாக்கம் பகுதியில் வேதமுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனத்தம்மாள் என்ற மனைவி உள்ளார். இதனையடுத்து அதே பகுதியில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பூங்காவனத்தம்மாள் பெரணம்பாக்கம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருமலை பூங்காவனத்தம்மாளை வழிமறித்து அவதூறாக பேசி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை […]

Categories

Tech |