சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வலவிடாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி(32) என்பவர் கடலூர் மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாக( பயிற்சி) இருக்கிறார். இவர் நேற்று மாலை குடும்பத்தினருடன் ஜீப்பில் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். இந்த ஜீப்பை போலீஸ்காரர் தமிழ்குமரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணகுப்பம் கூட்டு ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது லோகேஷ் என்ற சிறுவன் […]
