மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகேயுள்ள திருமழிசை பிரயாம்பத்து பகுதியை சேர்ந்த மூர்த்தி பெயிண்டர் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு உணவு முடிந்ததும் வீட்டு மாடியில் உறங்கச் சென்று உள்ளார். இந்நிலையில் மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கும் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதனால் அவர் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக் […]
