பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரின் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் ரோகிணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ரோகிணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியான தினேஷ்குமார் என்பவர் அறிமுகமானார். அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்ததாகவும், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரோகிணி தினேஷ் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை குறைந்த […]
