ஆந்திரா வழியாக சென்னைக்கு லாரி மூலம் மணல் கடத்திய ட்ரைவர், கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சின்னம்பேடு அகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயல் வழியாக சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அசுர வேகத்தில் வாகன சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. உடனே அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை […]
