கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த சலவைத் தொழிலாளியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் கோபால்.. இவர் சலவைத் தொழிலாளி ஆவார்.. இந்நிலையில் இவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் வெளியே நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.. இவரது குடும்பத்தினர் வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் திடீரென கோபாலின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவரின் குடும்பத்தினர், கதவை திறந்து வெளியில் வருவதற்கு […]
