குழந்தை திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 2 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கும், 21 வயது பூர்த்தியாகாத ஆணிற்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த குழந்தை திருமணத்தால் இளம் வயதில் கருத்தரித்தல், ரத்தசோகை, எடை குறைவாக குழந்தை பிறத்தல், கருச்சிதைவு, மனவளர்ச்சி குன்றிய குழந்தை பெறுதல், தாய் மற்றும் சேய் மரணம் ஆகிய அபாயங்கள் ஏற்படுகின்றது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் […]
