தேனியில் பெய்த பலத்த மழையால் மின் கம்பம் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே அனைத்துப் பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் 100°க்கும் மேலாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால் தற்போது கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை செய்தது. இந்த மழைப் பொழிவில் குளிர்ச்சியான சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். […]
