நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள அக்ரஹாரம் தெருவில் ராஜாத்தி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகனை பார்ப்பதற்காக விஐபி நகருக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மகன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள் 2 பேர் மூதாட்டியை பின் தொடர்ந்துள்ளனர். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் […]
