கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கோட்டையூர் கோடீஸ்வரசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நாட்களான கடந்த 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் […]
