லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் மீன் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழவாசல் பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீன் வியாபாரியான ஷேக்தாவூத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஷேக்தாவூத் மீன்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த மினி லாரியை தங்கபாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்களுடன் கமலநாதன், ரசூல் ஆகியோரும் இருந்தனர். இந்நிலையில் […]
