இறந்தவரின் சடலத்தை வாய்க்கால் வழியாக கொண்டு செல்லும் அவலநிலையை தடுக்க பாலம் அமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து மயானத்திற்கு போகும் பாதையின் குறுக்கில் கிளை பாசன வாய்க்கால் இருக்கிறது. இதில் தற்போது தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் மகாலிங்கத்தின் சடலத்தை அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே வாய்க்காலின் குறுக்கே பாலம் […]
