Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. விவசாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு…. மணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி…. தஞ்சையில் பரபரப்பு….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திருமணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார். மதுரை ஐகோர்ட்டானது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தரக்கோரி தஞ்சாவூர் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் திருவையாறில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சதய விழா.. தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!

மாமன்னன் ராஜராஜ சோழன் 1036 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..  

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மகளுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதில் கும்பகோணம் அருகில் உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவில் கவுதமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு விஜயபிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அனன்யா, அஜிதா என்ற மகள்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினர் அனைவரும் மண்சுவரால் கட்டப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மாணவரின் விபரீத முடிவு…. உறவினர்கள் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

மாணவரின் விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்தார். இவர் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் மாணவர் விஷால் திடீரென்று விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவரின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்குதான் வச்சுட்டு போனேன்…. மர்ம நபர்களின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அடகு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் நகை மற்றும் ஒரு துணிப்பையில் 32 ஆயிரத்து 714 ரூபாயை எடுத்துக்கொண்டு முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய சூப்பர்வைசர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அடுத்த மாத்தூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் தங்கியிருந்தார். இவரது குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. மாட்டி கொண்ட 59 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தஞ்சை தெற்குவீதி, மானோஜிப்பட்டி, ஒரத்தநாடு, வில்வராயன்பட்டி, மருங்குளம், பிள்ளையார்பட்டி, நெய்குப்பை, பாபநாசம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 543 மது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை… தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கார் கதவு மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. விவசாயிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி பகுதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்திய டிரைவர் தன்பக்கமுள்ள கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் திறக்கப்பட்ட கார் கதவில் பயங்கரமாக மோதினார். இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாடகமாடிய பெண் உட்பட 2 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உதவுவது போல் நடித்து நகைகளை திருடிய பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 30-ஆம் தேதி வீராசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சங்கீதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இதனையடுத்து அன்று இரவே வீராசாமிக்கு சிகிச்சை முடிந்து மகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சேறும் சகதியுமாக இருக்கு” இப்படிதான் எடுத்து சென்றோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகர் கிராமத்தில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதில் பூண்டி பெரியார் நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில் இறந்தவரின் சடலத்தை கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் வயல் வழியே சேறும் சகதியுமாக உள்ள மண் பாதையில் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது “கிராமத்தில் ஒருவர் இறந்தால் சேறும் சகதியுமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்கு” சட்டென தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கூலித் தொழிலாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி மணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் அவரது உறவினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்து விலக்கி வைத்தார். இதனையடுத்து மணி வீட்டிற்கு சென்றார். அப்போது மணி  எனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் மனைவி லதாவிடம் கூறினார். இந்நிலையில் மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேறு காரணம் இருக்குமோ…? திருமணமான 2 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

திருமணமான 2 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் நிரஞ்சனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் பொன்காடு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தலைதீபாவளியை கொண்டாடுவதற்காக கணவன்-மனைவி இருவரும் நிரஞ்சனா வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் இரவு வேளையில் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்பின் நிஷாந்த் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மனைவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் அறைக்குள் புகுந்த மர்ம நபர்…. கேமராவில் சிக்கிய ஆதாரங்கள்…. தஞ்சையில் பரபரப்பு….!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஏ.டி.எம் இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் அறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டிவி கேமரா மூலமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…. ஒன்றுதிரண்ட ஊர் மக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கும்பகோணம் வேப்பத்தூரில் பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் ஒன்று உள்ளது. நேற்று இரவு அந்த ஏடிஎம் இயந்திரத்தைகடப்பாறையால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் மையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் கடப்பாரையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த சப்தம் கேட்டு ஊர் மக்கள் திரண்டு வருவதை பார்த்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர்.இதையடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலஉளூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மதுபான கடையின் மேற்பார்வையாளர் குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு” என் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்…. 43-வது இடம்…. சாதனை படைத்த மாணவன்….!!

“நீட் தேர்வில்” அகில இந்திய அளவில் 43-வது இடத்தை பிடித்து மாணவர் சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரமணி நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் ராமச்சந்திரன் மகன் அரவிந்த் என்பவர் 710 மதிப்பெண்களை பெற்று 43-வது இடத்தை பிடித்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வயிற்றில் ஏதோ ஊசி போல் இருக்கு” கணவர் கொடுத்த புகார்…. தஞ்சையில் பரபரப்பு….!!

அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கணவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இளங்கார்குடியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த லட்சுமி பிரசவத்திற்காக கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக பெய்த மழை…. கோவிலை சுற்றி தேங்கிய நீர்…. பக்தர்களின் கோரிக்கை….!!

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் வசதி அமைக்ககோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நான்கு பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் வளாகம் முழுவதும் கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர்-நாகை பைபாஸ் சாலை பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் ஏட்டு சாந்தகுமார் போன்றோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த வேல்முருகன், குருங்கலூரை சேர்ந்த டிரைவர் வினோத் ஆகிய 2 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட 13 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியாவுக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தனியார் தங்கும் விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 13 பேர் கொண்ட கும்பல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கச்சென்ற பெண்…. 2 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் 32 வயது மகளுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்தப் பெண் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வீட்டின் அருகில் உள்ள வடவாற்றின் கரையில் மேய்த்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற அந்த பெண் மீண்டும் வீடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்…. வன்கொடுமை செய்து கொடூர கொலை…. தஞ்சையில் அதிர்ச்சி….!!!!

தஞ்சை அருகே சூரியக் கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் கனகவல்லி (33)ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (28) சம்பவத்தன்று சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு கொலை செய்து பெண்ணின் சடலத்தை புதரில் வீசி உள்ளனர். இதுபற்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” தேங்கி நிற்கும் மழைநீர்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் நெல் வைத்திருக்கும் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை உலர்த்த முடியாத நிலை இருப்பதால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் தொடர்மழை…. இதை காயவைக்கும் தொழில் பாதிப்பு…. தவிக்கும் தொழிலாளர்கள்….!!

மழையின் காரணமாக கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உட்பட 34 கிராமங்களில் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் 134 விசைப்படகு வைத்திருப்பவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்றுவிட்டு பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் குவிந்து இருக்கு…. போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பதற்காக விவசாயிகள் அதை சாலை ஓரங்களில்  குவியல் குவியலாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எதிரே சாலை ஓரங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாலை ஓரங்களில் நெற்பயிர்கள் குவிக்கப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐராவதீஸ்வரர் கோவில்” இதை நடத்தி 17 வருடங்கள் ஆகிறது…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது. மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடைதெருவிற்கு சென்ற மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முரளிராஜா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் முரளிராஜா கிருஷ்ணன் பணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு கடைதெருவிற்கு சென்றார். அதன்பின் முரளிராஜா கிருஷ்ணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான குழந்தை…. தம்பதியினர் கொடுத்த புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்- நாகம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த 15-ஆம் தேதி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான குழந்தை…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

குழந்தையை கடத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்-நாகம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு முகம்மது சுலைமான் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளான். அந்த குழந்தை திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர், பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சில மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் கடத்தப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதற்காக மோதி கொண்ட இருதரப்பினர்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு…. பெண்கள் உட்பட 50 பேர் கைது….!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்து திருவைக்காவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை உள்ளிட்ட கிராம மக்கள் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து கடந்த 17-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவு பணியில் ஈடுபட்ட பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பதியினர்….!!

வயலில் நடவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்கொண்டார் இருப்பு கிராமத்தில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய கூலிதொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது உறவினரான கவுசல்யா என்பவர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் அருகில் இருக்கும் வயலில் நடவு பணிக்கு சென்றுள்ளார். அப்போது நடவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெண்ணை காப்பாற்ற சென்ற பாலாஜி…. விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை மற்றும் மகன் ஆகிய 2 பேரும் கடலின் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கவிபாரதி பகுதியில் பாலகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், ரக்சன் மற்றும் ரிஷிவந்திகா என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதினால் குடும்பத்தினருடன் பாலாஜி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த மின் கம்பி…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் புதுத்தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் அ.ம.மு.க ஊராட்சி கழகச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஒத்திக்கு எடுத்து அதில் சாகுபடி செய்து வந்துள்ளார். அதன்பின் நிலத்தில் நடவு நடுவதற்கான பணியில் ஈடுபடுவதற்காக விஜயகுமார் என்பவருடன் டிராக்டரில் வயலுக்கு சென்றுள்ளனர். […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

ஓடிபி மூலம் கொள்ளையா ? உடனே இத செய்யுங்க…!!

உலகிலேயே அதிகளவு இணையத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. வளர்ந்த தொழில்நுட்பத்தை பலவகைகளில் பயன்படுத்தி பலன் அடையும் பலருக்கும் அதிலுள்ள குறைபாடுகள் முழுமையாக தெரிவதில்லை. அப்படி இருக்கும் குறைபாடுகளில் ஒரு பகுதியாக தொழில்நுட்ப ரீதியிலான ஆன்லைன் மோசடிகளில் பலரும் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தாலும் ஆங்காங்கே இது குறித்தான புகார்கள் மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஓடிபி மூலமாக கொள்ளை நடைபெறுகிறது என்ற […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டென விழுந்த நிலைவாசல்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நிலைவாசல் தலையில் விழுந்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், ப்ரீத்தி என்ற மகளும் உள்ளனர். இவர் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிலைவாசலை வீட்டின் சுவரில் சாய்த்து வைத்திருந்தை சிறுமி பிடித்து விளையாடிய போது திடீரென அவரின் மீது சாய்ந்து விழுந்ததுள்ளது. இதில் ப்ரீத்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நிலைவாசல் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடக்குவாசல் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் 2-ஆம் வகுப்பு படிக்கும் பிரீத்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பொருத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலைவாசலில் ஏறி விளையாடியுள்ளார். இதில் திடீரென நிலைவாசல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி… கதவு சட்டம் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவரின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்து தொங்கி விளையாடிய 7 வயது சிறுமி, கதவு சட்டம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் சுண்ணாம்புகார பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்துவருகிறார். அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதில் முகப்பு கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவு சட்டம் வாங்கி சுவரின் மீது செங்குத்தாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடித்து தொங்கியவாறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்சார வயர்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இவர் அ.ம.மு.க. தலையாமங்கலம் ஊராட்சி செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலைகளை பார்த்து விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வயலில் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத ஜெயராமன் அந்த வயரை மிதித்ததும் மின்சாரம் தாக்கி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த தகவல்…. ஏமாற்றத்தை உணர்ந்த என்ஜினீயர்…. போலீஸ் விசாரணை….!!

ஆன்லைன் விளையாட்டின் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரத்தில் ஜெரால்டு என்பவர் வசித்து வருகின்றார். இவர் என்ஜினீயராக இருக்கின்றார். இவருடைய செல்போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வீட்டில் இருந்து பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் பெறலாம் என தகவல் வந்தது. அந்த தகவலை ஜெரால்டு பார்த்தபோது ஒரு தொடர்பு வாட்ஸ்-அப் எண்ணிற்கு சென்றது. இதனையடுத்து தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது. அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எலுமிச்சை மரத்தால் வந்த தகராறு…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் புதூர் தெற்கு தெருவில் பணியாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிற்கும் எலுமிச்சை மரத்தை பணியாளர்கள் வெட்டியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான முத்துசாமி என்பவர் கூறியதை கேட்டு தான் பணியாளர்கள் மரத்தை வெட்டியதாக ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ராஜேந்திரன் முத்துசாமியை அரிவாளால் சரமாரியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை தவற விட்ட மாணவி…. காரில் வைத்து மெக்கானிக்கின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 பயின்று வருகிறார். இந்த மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் செல்லும் பேருந்தை தவற விட்டு விட்டார். இதனால் அவரது பெற்றோர் மாணவியை அவர்களது உறவுக்காரரான தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த கார் மெக்கானிக் அக்பர் அலி என்பவருடன் மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொட்டலத்தில் இதுவா இருக்கு…? சரணடைந்த 4 பேர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடந்த 26-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன், கண்காணிப்பாளர்கள் பாலமுரளி, ரமேஷ், கழுகாசலமூர்த்தி, ஆய்வாளர் மாசிலாமணி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கீச்சாங்குப்பம் அருகே புதிய துறைமுகம் பகுதியில் மீன்பிடி பைபர் படகில் சிலர் பெரிய அளவிலான பொட்டலங்களை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கட்டாயம் அணிய வேண்டும்…. விதிமுறை பின்பற்றாத பொதுமக்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

சாலையில் முகககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையம் அருகாமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் அவ்வழியில் முககவசம்  அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாவல் பழம் பறிக்க சென்ற சிறுவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முசிறி பகுதியில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி தனது நண்பரான கமலேஷ் என்ற சிறுவனுடன் முசிறி ஏரி அருகில் இருக்கும் நாவல் மரத்தின் பழம் பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவர்கள் இருவரும் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளை காதலித்த டிரைவர்…. தந்தையின் கொடூர செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் வேட்டமங்கலம் கீழத்தெருவில் இளங்கோவன் மகன் பிரபாகரன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இதில் பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் மணிகண்டனின் மகளை காதலித்ததாக தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சிபுரம் கடைவீதியில் பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாதனை படைத்த வீரர்கள்…. 40 ஏக்கரில் அமைக்கப்படும்…. அமைச்சரின் தகவல்….!!

ஊட்டியில் உயர்ரக விளையாட்டு பயிற்சி மையமொன்று அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர, திருவாரூர் தடகள சங்கம் சார்பாக டெல்டா மாவட்ட அளவிலான போட்டிகள் பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் ஓட்ட போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

45 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்…. விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு…!!!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் 45 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். அதன் பின்னர் ஒரத்தநாடு புதூரில், இயங்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்திய பெண்…. 30 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

அரசு ஆஸ்பத்திரியில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா காலனியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதியன்று ராஜலட்சுமி தஞ்சையிலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் அவர் அறையில் இருந்த ஒரு பெண் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் […]

Categories

Tech |