கூலி தொழிலாளியை சகோதரர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்பனூர் பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இவரது முதல் மனைவியின் மகனான மாரியப்பன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சுப்பையாவின் 2-வது மனைவியின் மகனான இசக்கிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு மாரியப்பன் இசக்கிமுத்துவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த […]
