மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசைராஜா(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இசைராஜா தனது நண்பரான முருகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருக்கும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மேலப்பாவூர் அடுத்துள்ள கால்வாய் அருகே […]
