சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து குளிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் நீர்வரத்து அதிகமானதன் காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குற்றாலத்தில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து […]
