குருபெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தட்சிணாமூர்த்தி சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று குருபெயர்ச்சியை முன்னிட்டு காலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் அதிகாலை 4.16 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார். அப்போது சிவன், தட்சிணாமூர்த்தி மற்றும் […]
