மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள சத்யா நகரில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். காசி விசுவநாதன் விபத்து நடந்த அன்று தன்னுடைய மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசிவிசுவநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் ஒருவரான தினேஷ் சிறிது காயங்களுடன் உயிர் […]
