Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் அப்படி பண்ணுனோம்… மாமியார்-மருமகள் கொடூர கொலை… சோதனையில் சிக்கியவர்… வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மருமகள், மாமியார் இருவரையும் கொலை செய்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை 8 மாதத்திற்கு பிறகு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முடுக்கூரணி கிராமத்தில் சந்தியாகு என்னும் 65 வயது முதியவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜகுமாரி (60) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனான ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சினேகா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மோடி எங்க டாடி” என்கிறார் அ.தி.மு.க. அமைச்சர்… வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்… சிங்கம்புணரியில் பரபரப்பு பிரசாரம்..!!

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிங்கம்புணரியில் 10 வருடங்களாக திறக்கப்படாமல் உள்ள சமத்துவபுரம் திறக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பெரிய கருப்பனுக்கு ஆதரவாக தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, பா.ஜ.க. உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இருந்தவரை மோடியா லேடியா எனக் கேட்டார். அவர் மறைந்த பிறகு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய முதியவர்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தாயமங்கலம் பகுதியில் உள்ள மதுபான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதே வேலையா போச்சு… சட்டவிரோதமாக செய்த செயல்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை இளையான்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி காவல் நிலையத்திற்கு, பூச்சியனேந்தல் கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஒருவர் பெட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஜாதி மத வேறுபாடின்றி… கோலாகலமாக கொண்டாடப்பட்ட திருவிழா… ஏராளமானோர் சிறப்பு வழிபாடு..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் அனைத்து சமுதாய மக்களாலும் மத நல்லிணக்க திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்தில் மதநல்லிணக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழாவை அனைத்து சமுதாய மக்களும் வருடம்தோறும் இணைந்து நடத்துவது வழக்கம். இந்த வருடத்திற்கான திருவிழா ஷாபான் 1-ம் பிறையில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது. சந்தனக்கூடு ஷாபான் 10-ம் பிறையில் நகர் வலம் வந்து அதன் பின் ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவிற்கு வந்தடைந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… ரொம்ப கவனமா இருங்க… சுகாதார துறையினர் ஆலோசனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் கொரானா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் கொரோனா தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதா மணி தலைமை தாங்கியுள்ளார். அவர் தலைமையில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சென்று முககவசம் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரோனா… முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக… மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு..!!

சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளாப்பூர், எஸ்.எஸ்.கோட்டையில் கொரோனா பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிங்கம்புணரி பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் கொரானா குறித்து எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு இதற்கு முன்னதாக மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்து பாடம் நடத்தினார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கையில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியத்தில் மரத்தின் மீது மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.கோவில்பட்டி பகுதியில் வெள்ளிமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் (வயது 27) என்ற மகன் இருந்தார்). இவருக்கு திருமணம் முடிந்து ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் எம்.கோவில்பட்டிக்கு, சிங்கம்புணரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் மருதிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையோரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கையில் விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெட்டூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கூலி வேலை பார்ப்பதற்காக வாழை இழை அறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தாழ்வாக சென்ற மின்சார கம்பி உரசியதில் ஆறுமுகம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்தவருடைய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவை அனைத்தையும் நிறைவேற்றுவேன்… காரைக்குடி தொகுதியில்… அ.ம.மு.க. வேட்பாளர் தீவிர பிரச்சாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி வி.பாண்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியான காரைக்குடி நகர சாக்கோட்டை ஒன்றியம், கண்ணங்குடி, தேவகோட்டைநகர், ஒன்றிய பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் தேர்போகி பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சியினரும், மாற்றுக் கட்சியினரும் பொதுமக்களும் மாலை அணிவித்து வரவேற்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் தேர்போகி பாண்டி பேசியதாவது, தொகுதியில் குடிநீர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவங்கள இங்க அனுமதிப்பது பேராபத்து… முடிவை மறுபரிசீலனை செய்யுங்க… தேர்தல் ஆணையத்துக்கு பரபரப்பு மனு..!!

வாக்குப்பதிவு மையத்திற்குள் கொரோனா தொற்று நோயாளிகளை அனுமதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கும் நேரமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு, திருப்பூரை சேர்ந்தவர் கல்வியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன்… திருக்கல்யாண சிறப்பு நிகழ்ச்சி… திரளான பக்தர்கள் வழிபாடு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. இது சுந்தரர், கருவூர்தேவர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், அப்பர் போன்ற சமயப புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 19-ஆம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… ரொம்ப எச்சரிக்கையா இருங்க… சுகாதாரப்பணி துணை இயக்குனர் அறிவுரை..!!

சிவகங்கையில் இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றவர்களிடம் ரூ.4 3/4 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் சிங்கையில் கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ அலுவலர்கள் தலைமையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், சமூக இடைவெளி பின்பற்றாமல் செல்பவர்களுக்கும், அரசு வழிகாட்டுதலின்படி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் குழு அமைக்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கையில் அனைத்து நகராட்சிகள் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பலனளிக்கும் பிரதோஷ வழிபாடு… சிறப்பான 16 வகை அபிஷேகங்கள்… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கையில் உள்ள பல கோவில்களில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் பழமையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் அலங்கார பூஜைகளும், 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு நடைபெற்றது. இதேபோன்று பிரதோஷ வழிபாடு உலக நாயகி சமேத ராமநாதசாமி கோவிலிலும் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து ரிஷபவாகனத்தில் உள் மண்டபத்தில் உலக நாயகி சமேத உலகநாத […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலர்களுக்கு… இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பணியாளர்களுக்கு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை தேர்தல் பார்வையாளர் எச்.எஸ்.சோனாவனே, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதன் ரெட்டி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் வாக்குபதிவு அன்று தேர்தல் அலுவலர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோட்டூர் முத்துமாரியம்மன் கோவில்… திருவிழாவை முன்னிட்டு… திருவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு..!!

சிவகங்கை மாவட்டம் கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு 2,000 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் திருவிழா வருடந்தோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எங்க வாழ்வாதாரமே போச்சு… போட்டோ கடை உரிமையாளர்களின்… கடையடைப்பு போராட்டத்தால் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் போட்டோ ஸ்டூடியோ, வீடியோ கடை உரிமையாளர்கள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கு வீடியோ எடுக்கும் பணியை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வீடியோ போட்டோ தொழிலாளர்களிடம் அளிக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளித்துள்ளனர். இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார் கோவில், சிங்கம்புணரி, சிவகங்கை, அந்தந்த மாவட்டம் முழுவதிலும் வீடியோ எடிட்டிங், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பரபரப்பு… இவர்களுக்கு படிவங்கள் அச்சிடும் பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் அச்சிடும் பணி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிப்புதூரில் உள்ள கூட்டுறவு அச்சகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கும், தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்காக முன்னேற்பாடு பணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறையை மீறிட்டாங்க… இதுவரை இவ்ளோ வழக்குகள்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 41 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;- சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முழு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும்  3 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதிலிருந்து எங்களுக்கு விலக்கு குடுங்க… தேர்வு செய்யப்பட்டவர்கள் திடீர் முடிவு… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை..!!

சிவகங்கையில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க கோரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 1,679 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இந்த வாக்குப்பதிவு மையங்களில் பணி புரிவதற்காக ஒரு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 59 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவில்… பங்குனி உத்திர திருவிழா. கோலாகலமாக காப்பு கட்டுதலுடன் தொடக்கம்..!!

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சுப்ரமணியன் சுவாமி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான விஸ்வநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10 நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 19-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. கோவில் விழாவை முன்னிட்டு முருகருக்கு அலங்காரமும், அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தினமும் இரவு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எல்லாம் தயாரா இருக்கு… தேர்தலுக்கு முந்தைய நாள் வந்து சேரும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்துவதற்காக 15 வகையான பொருட்கள் தயார் நிலையில் எடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்கு தேவையான பொருள்கள், வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். அதனை நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் வந்தாலே இப்படி தான்… வேட்பாளர்கள் வருகையால்… களை கட்டிய கிராமம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களை வரவேற்பதற்காக கிராம மக்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அதிகாரிகள் ஒரு பக்கம் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்தலுக்கான பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். கட்சி தலைவர்கள் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் வாக்காளர்களாகிய பொதுமக்கள் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்களை வரவேற்பதில் ஆர்வம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு… விருப்பமிருந்தால் பயன்படுத்திக்கோங்க… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு..!!

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் தீயணைப்புத்துறையினர், முன்னாள் மத்திய ஆயுதப்படை வீரர்கள், முன்னாள் சிறைத் துறையினர், முன்னாள் வனத்துறையினர் சிவகங்கை மாவட்ட காவல் நிலையத்தில் வருகின்ற 25-ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரமாகப்பட்ட தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… ஆய்வின் போது சிக்கியவர்கள்… அதிரடி வேட்டையில் அதிகாரிகள்..!!

சிவகங்கையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டவிரோதமாக நடைபெறும் அனைத்து செயல்களையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்ட டாஸ்மார்க் அலுவலக அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலால் துறை குழு சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் வாகன சோதனை… வசமாக சிக்கிய வியாபாரி… அதிரடி காட்டும் பறக்கும் படை..!!

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணங்களை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம்-சிரமம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் விழா தொடங்க போகுது… பக்தர்கள் இதை கட்டாயம் கடைபிடிக்கணும்… மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..!!

சிவகங்கை திருப்புவனம் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமன் தலைமையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவிலில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கோவில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கல்லூரியின் 51-ஆவது விளையாட்டு விழா… வெற்றி பரிசை தட்டிச் சென்ற மாணவர்கள்..!!

சிவகங்கை இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 51-வது விளையாட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆட்சிக் குழு தலைவர் முகமது சுபைர் தலைமையில் 51-வது விளையாட்டு விழா கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் வாழ்த்துரை கூறினார். தேனி கனரா வங்கியின் மண்டல மேலாளர் காளிராஜ் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கல்லூரியின் முதல்வர் அப்பாஸ் மந்திரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்… பங்குனி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரியாகுறிச்சி குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் வெட்டுடையார் காளி அம்மனுக்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பங்குனி மாத சிறப்பு அலங்காரம்… சந்தானலட்சுமியாக காட்சியளித்த மாரியம்மன்… கண்குளிர கண்டு மகிழ்ந்த பக்தர்கள்..!!

சிவகங்கை தேவகோட்டை அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சந்தானலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அனைத்து கோவில்களிலும் பங்குனி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும் கோவில் கருவறையில் இருக்கும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சாமியாடி பெரியகருப்பன் தெருவில் சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாதத்தின் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அம்மனுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாமனார் வீட்டுக்கு போயிருந்தேன் சார்..! இப்படி பண்ணிட்டானுங்க… சிவகங்கையில் இளம்பெண் பரபரப்பு புகார்..!!

சிவகங்கை காரைக்குடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சி.மெ. வீதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி உள்ளார். கல்யாணி சம்பவத்தன்று மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து நடந்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகாளியம்மன் கோவில் அருகே இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்… 5 பேர் படுகாயம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலையரசி அம்மன் கோவிலில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த நெடுமரம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை ஊர்க்குளத்தான்பட்டி, சில்லாம்பட்டி, நெடுமரம், உடையநாதபுரம், என்.புதூர் ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். இந்த வருடம் தேர்தலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அந்த கோவிலில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் மிரட்டும் கொரோனா… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… ஊராட்சி சார்பில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பர்மா காலனி பேருந்து நிலையத்தின் அருகில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… மாவட்டம் முழுவதும் முகாம் அமைக்கணும்… மாவட்ட ஆட்சியர் ஆலோசனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா வைரஸ் நோயை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நீரின்றி அமையாது உலகு”… உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு… சீரமைக்கப்பட்ட புதுக்கண்மாய் வரத்து கால்வாய்..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதுக்கண்மாய் வரத்து கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்றது. தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே உள்ள கரியாம்பட்டி கிராமத்தில் புதுக்கண்மாய் வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு எஸ்.புதூர் ஆக்ஸிஸ் அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை சார்பில் சீரமைப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியை காணாமல் தவித்த கணவன்… சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குளத்தில் இளம்பெண் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சாலை பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு அமுதா ராணி என்ற மனைவி இருந்தார். அமுதா ராணி சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளதுள்ளார். இதன் காரணமாக அவர் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அமுதா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பால்குட விழா… நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்… சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அய்யனார்..!!

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள செங்கோல் உடைய அய்யனார் கோவிலில் பால்குட திருவிழா செம்மையாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள நெற்புகப்பட்டி பகுதியில் சக்தி வாய்ந்த செங்கோல் உடைய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பால்குட திருவிழா நடந்தது. மேலும் பக்தர்கள் சந்தன குடம், பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக சென்று பின் கோவிலுக்கு வந்தடைந்தனர். இதையடுத்து கோவிலில் பூக்குழி திருவிழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில்…. இவங்க தான் போட்டியிட போறாங்க….. இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தேர்தலில் போட்டியிட சிவகங்கை காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர்களாக 13 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாங்குடி, பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எச்.ராஜா உள்ளிட்ட 26 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் வேட்புமனு பரிசீலனையில் தள்ளுபடி செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்குவதற்கு நேற்று தான் கடைசி நாளாகும். இந்நிலையில் நான்கு பேர் தங்களுடைய வேட்பு மனுவை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை மானாமதுரை சட்டமன்ற தொகுதியில்…. இவங்க தான் போட்டியிட போறாங்க….. இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சிவகங்கை மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 13 பேர் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தமிழரசி, அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் உள்ளிட்ட 17 பேர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் தி.மு.க. , அ.தி.மு.க. வேட்பாளர்கள் நான்கு பேர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 பேர் இறுதி வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கட்சி, பெயர் விவரம், சின்னம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… படுகாயமடைந்த தொழிலாளி… போலீஸ் விசாரணை..!!

சிவகங்கை இளையான்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் தெட்சணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தெட்சணாமூர்த்தி இளையான்குடி கண்மாய் கரை பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக தொழிலாளி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. இதில் தெட்சணாமூர்த்திக்கு பலத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தீவிரப்படுத்தப்பட்ட சோதனை… இரட்டை இலக்காக உருமாறிய கொரோனா… பொதுமக்கள் பீதி..!!

சிவகங்கையில் வேகமெடுத்து பரவிவரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சென்ற வருடம் ஏப்ரல் கொரோனா பரவியது. இதையடுத்து கொரோனா படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதன்பின் சிறிது நாட்களாக குறைந்திருந்த கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனா தோற்றால் கடந்த 18-ஆம் தேதி அன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கனும்… சிவகங்கையில் விழிப்புணர்வு..!!

சிவகங்கை சங்கராபுரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த விழிப்புணர்வில் பொதுமக்களிடம் கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சணமுகம் தலைமை தாங்கியுள்ளார். இதில் பொது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இருக்குறதையும் இழக்க நாங்க தயாராயில்லை… இதுக்கு ஒரு நியாயம் வேணும்… உண்ணாவிரதத்தில் இறங்கிய கிராம மக்கள்..!!

சிவகங்கையில் கிராம மக்கள் காரைக்குடி-மேலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கூலி வேலை மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் காரைக்குடியிலிருந்து மேலூர் பகுதி வரை பைபாஸ் சாலை அமைப்பதற்காக சர்வே அளக்கப்பட்டு பணியும் விரைவாக நடைபெற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலகத்திற்கு வந்த தகவல்… வசமாக சிக்கிய அ.தி.மு.க. பிரமுகர்… அதிகாரிகள் தீவிர விசாரணை..!!

சிவகங்கை கல்லல் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டில் சோதனையின்போது ரூ.70,000 பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள ஆளவந்தான்பட்டியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவி உள்ளார். நாகராஜன் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அ.தி.மு.க. பிரமுகர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக இவருடைய வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. அந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன்… பங்குனி மாதத்தையொட்டி… சந்தானலட்சுமி சிறப்பு அலங்காரம்..!!

சிவகங்கை தேவகோட்டை அருகே பங்குனி மாதத்தை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் சாமியாடி பெரியகருப்பன் தெருவில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும். அதேபோல் இந்த வருடமும் பங்குனி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் வண்ண பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மனுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்கியாச்சு… எந்த அசம்பாவிதமும் நடந்துற கூடாது… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க… வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல்..!!

கொரோனா வேகமெடுத்து பரவி வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சிவகங்கையில் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் வேகமெடுத்து வரும் கொரோனாவால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. அரசு பொது மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார நிலையங்கள் ஆகியவ இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் நம் முன்னோர்கள் பயன்படுத்தியது… ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு… அதிகாரிகள் தகவல்..!!

சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிதைந்த நிலையில் தானியங்கள் சேமித்து வைக்கும் கலன் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி கொந்தகையிலும், கீழடியிலும், அகரத்திலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் தோண்டப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரு குழியில் சில்லுவட்டுக்கள், பாசிமணிகள், பானை ஓடுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்று கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சேதமுற்ற முதுமக்கள் தாழிகள் மற்றும் முதுமக்கள் தாழி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. அகரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எச்சரிகையா இருங்க… மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… மறு உத்தரவு வரும் வரை மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்..!!

சிவகங்கை கல்லல் அருகே ஒரே வகுப்பை சேர்ந்த 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வேகமெடுத்து பரவிய கொரோனா சமீபகாலத்தில் குறைந்திருந்தது. இதையடுத்து சில வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வருகின்ற 22-ஆம் தேதி முதல் மறு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி என 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளது. காரைக்குடி தொகுதியில் 443 பூத்கள் உள்ளது. இங்கு 1640 மின்னணு வாக்குப்பதிவு […]

Categories

Tech |