Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா….? அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். பாண்டியராஜன் டெல்லியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரேணுகா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து  திரும்பி வந்த ரேணுகா வீட்டின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த நேரம் யாருமே இல்ல…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆற்றில் குளித்து கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மகேஸ்வரன் பெரியார் நகர் பகுதியில் இருக்கும் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். மேலும் அங்கு மகேஸ்வரன் மட்டுமே குளித்துக் கொண்டிருந்ததால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது யாருக்கும் தெரியவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் இங்க இருக்கீங்களா….? மடக்கி பிடித்த காவல்துறையினர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!

ஆயுதங்களுடன் நடமாடிய 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை காவல்துறையினருக்கு காரைக்குடி பகுதியில் சிலர்  பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஒரு கும்பல் வாள், பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மது அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் விளாரிக்காட்டு பகுதியில் வசிக்கும் கருப்பசாமி, அழகர், தேவா, மணிகண்டன், சின்ராசு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது காலாவதியாகிட்டா….? தாசில்தாருக்கு நடந்த சோகம்…. அதிகாரிகளிடம் புகார் மனு….!!

காலாவதியான மருந்தை உடலில் செலுத்தியதால் முன்னாள் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்து நகர் பகுதியில் தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராமதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவரது குடும்பத்தினர் ராமதாசை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து ராமதாசுக்கு செவிலியர்கள் குளுக்கோஸ் மருந்து பாட்டிலை ஏற்றினார்கள். அப்போது அவரது மகனான வெங்கடேஷ் எதார்த்தமாக குளுக்கோஸ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முகநூலில் அவதூறு பேச்சு… இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

முகநூல் பக்கத்தில் இளம்பெண் ஒருவர் பற்றி அவதூறாக பேசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் பற்றி இளைஞர் முகநூல் பக்கத்தில் அவதூறாக பேசி வந்துள்ளார். இது தொடர்பாக அந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான செந்தில் குமாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர்  விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சைபர் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கன மழை பெய்ததால்… சாலையோரம் தேங்கி நின்ற மழைநீர்… பொதுமக்களின் வேண்டுகோள்…!!

சாலையோரம் அமைந்துள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும் என அரசிற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலையோரம் அமைந்த கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படாத காரணத்தினால் மழைநீர் செல்ல இடமின்றி சாலையிலேயே தேங்கி நிற்கின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். “வானம் பார்த்த பூமி” என்ற இப்பகுதியில் மழை வந்தால் மட்டுமே விவசாயம் செழிப்பாக நடைபெறும். அதனால் சாலையோரம் அமைந்துள்ள கால்வாய்கள் அனைத்தையும் தூர்வாரும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உலகிற்கே பறைசாற்றும் தமிழர்களின் பாரம்பரியம்…. 7 – ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி…. அற்புதமான பொருட்கள் கண்டெடுப்பு….!!

தற்போது 7 – ஆம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 7 – ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தற்போது தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9 – ஆம் தேதியன்று கீழடி அகழ்வாராய்ச்சியின் போது சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கீழடி பகுதியில் சேதமடைந்த முதுமக்கள் தாழிகள், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை…. சாலைகளில் பெருக்கெடுத்த நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தாக்கத்தின் காரணமாக மக்கள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது தப்புனு தெரியாதா…. வசமா மாட்டிய 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த சீட்டை பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பூவந்தி காவல் சரகத்திற்கு உட்பட்ட மணல்மேடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அருகில் பணம் வைத்து சூதாடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், சீமை சாமி, கண்ணன், இளையராஜா ஆகிய 4 பேரையும் கைது செய்ததோடு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை வைக்க கூடாது…. பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்படுத்திய பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பேரூராட்சி பகுதிகளில் செயல் அலுவலர் கவிதா தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது பற்றி ஆய்வுசெய்துள்ளனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் பயன்பாட்டில் இருந்த பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடுஅதை பயன்படுத்திவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். மேலும் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழவயல் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்றபோது எஸ்.புதூர் மின்வாரிய அலுவலகம் அருகில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ராஜாங்கம் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னமராவதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது திடீரென அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மற்ற 2 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி நடத்தலாம்…. உங்களுக்கு அனுமதி கொடுக்கல…. 10 பேர் மீது வழக்குப்பதிவு….!!

இளையான்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியாராக பணிபுரிந்த ஸ்டேட் சுவாமி சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சரியாக குடிநீர் வழங்காததால் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்திற்கு தாலுகா பொருளாளர் அழகர்சாமி தலைமை தாங்கினார். அதன்பின் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொட்டித்தீர்த்த கனமழை… முதியவருக்கு நடந்த சோகம்…கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்னல்  தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூரக்குளம் பகுதியில் வேலு என்பவர் வசித்துள்ளார். இந்நிலையில் வேலு ஈச்சங்காடு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இதனையடுத்து செல்வராஜ் புளியமரத்திற்கு  அடியில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல்  தாக்கியதால் செல்வராஜ்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்பதான் நிம்மதியா இருக்கு… உற்சாகத்தில் பக்தர்கள்… கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம்…!!

சில நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமியை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வழிபாட்டு தலங்கள் திறப்பு உட்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வழிமுறைகள் விதிக்கப்பட்டன.  இதனையடுத்து கோவிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுதான் காரணம்… இறுதியில் தெரிந்த வந்த உண்மை…கால்நடை மருத்துவர்களின் தகவல்…!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் நிமோனியாவால்  பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 40 ஆடுகள் அடுத்தடுத்த நாட்களில் இறந்துள்ளன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து  காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆடுகளை பரிசோதித்துள்ளனர். இதில் ஆடுகளுக்கு நிமோனியா சளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் ஆடுகள் நிமோனியா நோயினால் தான் இறந்துள்ளன […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதன் மதிப்பு 3 லட்சமா…? சட்டவிரோதமான செயல்… காவல்துறையினரின் அதிரடி சோதனை…!!

சட்டவிரோதமாக   தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்த  வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் தொழிற்சாலையில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் பல்பொருள் தொழிற்சாலையில் குற்ற திற்காக சொந்தமான குடோனில்  திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் தடை செய்யப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா, பாலிதீன் பைகள் ஆகியவை சிக்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரணத்தை கண்டுபிடிச்சிட்டாங்க…கால்நடை மருத்துவர்களின் ஆய்வு…தெரிய வந்த உண்மை…!!

ஒரே கிராமத்தில் ஏரளமான ஆடுகள் இறந்ததால் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதியில் ஆய்வு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில்  சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் குறித்து நேற்று மானாமதுரை கவுன்சிலர் அண்ணாதுரை அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இன்று கால்நடை மருத்துவர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் இறந்தவ ஆடுகளுக்கு சளி இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் ஆடு வளர்ப்பவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கிக் கொடுத்ததன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நோயாளி பற்றி கவலை என்ன….? மருத்துவ அதிகாரியின் சர்ச்சை பேச்சு…. வெளியான ஆடியோவால் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட  கார்த்திக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காட்டும்படி செவிலியர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் கார்த்திக்கின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து செவிலியரை தொடர்பு கொண்ட அவர் நோயாளியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தது ஏன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது…வசமாக சிக்கிய நபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சொக்கலிங்கம், மகேந்திரன், வஜ்ஜிரம், கேசவன், மகேஷ்குமார், ஏழுமலை, தயாநிதி, அண்ணாதுரை, சொக்கன் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போலவே ஏரியூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் நிறைய கிடைக்கும்… ஒரே இடத்தில் 5 எலும்புக்கூடுகள்… தொல்லியல் துறையினரின் கண்டெடுப்பு…!!

அகழாய்வு பணியில் 5 மனித எலும்புக்கூடு கிடைத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பொருட்கள் மூலம் தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. தற்போது கீழடியில்  7 – ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் அகழாய்வு பணிகள் கீழடியில் மட்டுமின்றி அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னவாக இருக்கலாம்…திடீரென இறக்கும் ஆடுகள்… விவசாயிகளின் கோரிக்கை…!!!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம்  மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் செருவலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரது கிராமத்தில் திடீரென ஆடுகள் இறந்து விடுகின்றன. மேலும் இவருக்கு சொந்தமான 40 ஆடுகளும் இறந்து விட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் ஆடுகள் இறப்பதன் காரணம் தெரியாமல் இருந்தனர். இந்நிலையில் செருவலிங்கம் முதலமைச்சருக்கு அளித்த புகாரில் பின்வருமாறு கூறியுள்ளார். அதாவது எங்களது கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாகும். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாழ்க்கையே வெறுத்து போச்சு.. இளைஞர் செய்த செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

வேலை இழந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோபாலா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோபாலா சென்னையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் 5 வருட காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஒன்றரை வருடமாக வேலை இழந்த நிலையில் சுரேஷ் தனது தந்தையுடன் பூர்விக ஊரில் இருந்துள்ளார். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு… முதியவருக்கு நடந்த விபரீதம்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் பெயிண்ட் அடிப்பதற்கு தனது வீட்டின் போர்டிகோ மேலே ஏறியுள்ளார்.  அப்போது ராமச்சந்திரன் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எப்படி நடந்ததுனு தெரியல… சிற்பிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிற்பி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் பெங்களூரில் உள்ள கோவில்களில் சிற்பங்களை செதுக்குபவரான காத்தலிங்கம், அருண்குமார் என்ற இருவர் வசித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இந்நிலையில் காத்தலிங்கம், அருண்குமார் ஆகிய இருவரும் தங்களின் நண்பரான கவியரசை பார்க்க பணம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனையடுத்து பணப்பட்டியில் இருந்து சாக்கோட்டைக்கு செல்வதற்காக ஒரே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கவனமா இருக்க கூடாதா…? வாலிபருக்கு நடந்த விபரீதம்… வேதனையில் வாடும் குடும்பத்தினர்…!!

மாங்காய் பறிக்க முயன்ற போது வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் மாங்காய் பறிக்க முயற்சித்துள்ளார். அப்போது சொக்கலிங்கம் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதனால் சொக்கலிங்கத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப் பார்த்ததும் அருகிலுள்ளவர்கள் காயமடைந்த சொக்கலிங்கத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் சொக்கலிங்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவன் தான் இதுக்கு காரணம்… பெண் எடுத்த விபரீத முடிவு… கொந்தளித்த உறவினர்கள்…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தமிழ்செல்வி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்செல்வி தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து திருப்புவனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… சிரமப்படும் பொதுமக்கள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதிக்கு அருகே உள்ள சீத்தூரணி சாலை ஓரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு குப்பைகள் ஆங்காங்கே சுத்தப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நடைபயிற்சி செய்பவர்கள், குழந்தைகள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் ஆகிய அனைவரும் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் அந்த சாலையோரம் செல்லும் சிறிய குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நோய் தொற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின் போது… சட்ட விரோதமாக நடந்த செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இளையான்குடி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் தனியார் சேம்பர் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுபாலை காலனியில் வசிக்கும் நாகராசு என்பதும் சட்ட விரோதமாக மது விற்றதும் தெரியவந்துள்ளது. மேலும் இளையான்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நான் இங்கதான் நிறுத்தியிருந்தேன்… சிக்கிய இரண்டு பேர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மோட்டார் சைக்கிளை திருடிய இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து  திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து மணிகண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சோழபுரம் பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு செல்லும் போதே இரண்டு லாரி மற்றும் ஒரு வேனில் அரிசி மூடைகள் ஏற்றி கொண்டிருந்ததை பார்த்தனர். அதன்பின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க ஏற்கனவே சொன்னோம்… பெயர்ந்து வரும் புதிய சாலை… பொதுமக்களின் கோரிக்கை…!!

புதியதாக அமைக்கப்பட்ட தார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியிலிருந்து காளக்கண்மாய் கிராமத்திற்கு மருதக்கண்மாய் வழியாக சாலை செல்கிறது. இந்நிலையில் மருதக்கண்மாயிலிருந்து ஒட்டாணம் வரை ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து விட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது போடப்பட்டுள்ள தார்ச்சாலையில் ஜல்லிக்கல் நிரப்பாமல் அமைக்கப்பட்டதால் அப்பகுதி வழியாக வாகனங்கள் சென்ற போது அது பெயர்ந்து விட்டது. இதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த கற்கள்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் சுபைதா பேகம் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுபைதா பேகம் கொட்டாம்பட்டியில் வசிக்கும் தனது மூத்த மகனை பார்ப்பதற்காக இளைய மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து தனது மகனை பார்த்து விட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சுபைதா பேகம் வீட்டிற்கு மகனுடன் புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவிலூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவர் உயிரோடதான் இருக்காரு…. இறந்ததாக கருதப்பட்ட நபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி என்ற கிராமத்தில் 60வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தென்னந்தோப்பில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை அடுத்து இறந்து கிடந்த நபர் அதே பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணுவாக இருக்கலாம் என காவத்துறையினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் காவல்துறையினர் அவரின் சகோதரரான அர்ஜுனை அழைத்து இறந்து கிடப்பவர் சின்னக்கண்ணு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை இப்படித்தான் பயன்படுத்தனும்… இணைய வழி பயிற்சி… விவசாயிகளின் கருத்து…!!

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு இணையவழியில் பயிற்சி அளித்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டம் மூலம் இணைந்து நடத்தப்பட்ட விவசாயிகளுக்கான இணையவழி பயிற்சியில் பயிர் கழிவு மேலாண்மை மற்றும் ரசாயன மருந்துகளை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வேளாண்மை உதவி இயக்குனர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை எப்படி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெளியே யார்கிட்டயும் சொல்லாத” திருமணம் செய்யாமல் பெற்ற குழந்தை… இளம்பெண்ணின் பரபரப்பு புகார்…!!

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் மீது இளம்பெண் கைக்குழந்தையுடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் கார்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகாவும் அரியக்குடி பகுதியில் இருக்கும் தமிழ்ச்செல்வனும்  காதலித்து வந்துள்ளனர். அதன்பின் தமிழ்செல்வன் கார்த்திகாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வன் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ச்செல்வனை அலைப்பேசி மூலம் தொடர்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“நான் ஏற்கனவே கொடுத்துட்டேன்” சரமாரியான தாக்குதல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கடன் தொகை செலுத்திய விவகாரத்தில் இருவர் இணைந்து மூன்று பேரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலந்தங்குடி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 2016 – ஆம் ஆண்டு கிருஷ்ணன் துபாயில் வேலை செய்தபோது சித்தலூர் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி என்பவரிடம் 1 ½ லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு அந்த கடன் பணத்தை சித்தலூரில் இருக்கும் தனது தம்பியான சிவகுருநாதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி… குறைந்த வட்டியில் கடன்… மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மானியத்துடன் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழக நிறுவனத்தால் மானியத்துடன் குறைந்த வட்டியில் கடன் திட்டத்தை மாவட்ட ஆட்சியரான மதுசூதன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 1 – 5 லட்சம் வரை கடன் பெற்றுக் குறைந்த வட்டியில், அதாவது 6.5% […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு… பயன்பாட்டிற்கு வந்த மின்மாற்றி… நன்றி தெரிவித்த பொதுமக்கள்…!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.ஆர் நகர், ராஜா நகரில் மின்னழுத்த குறைபாடு பிரச்சனையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த மேற்பார்வை பொறியாளரான சகாயராஜ் அப்பகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளரின் மேற்பார்வையில் வாணியங்குடி பகுதியில் 100 கிலோ வாட் பவர் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டுள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது கல்யாணம் ஆயிடுச்சா… அதிர்ச்சி அடைந்த இளம்பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் ஆகாத பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலசைப்பட்டி பகுதியில் பாலசுப்ரமணியன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் இவர் திருமணம் ஆகாத இளம் பெண்ணை ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலசுப்ரமணியம் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண் பாலசுப்பிரமணியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சகோதரி… நடந்த அதிர்ச்சி சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியும் அவரது மனைவியும் சொத்து காரணமாக சில நாட்களாக சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் சில நாட்களாக பழனி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி வீட்டில் அனைவரும் திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை பூட்டி விட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்களால நடக்க முடியல… பெண்களின் போராட்டம்… சிவகங்கையில் பரபரப்பு…!!

பெண்கள் இணைந்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதில் இருக்கும்  யூனியன் அலுவலகத்தில் முன்பு 100 பெண்கள் இணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வட்டாரம் வளர்ச்சி அலுவலர் லெட்சுமண ராஜ் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் நாங்கள் லட்சுமிபுரம், சங்கம்பட்டி, மணப்பட்டி, கக்கினாம்பட்டி மற்றும் கோனார் பட்டியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன கொடுமை சார் இது… குடும்பத்தினரின் அவல நிலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

50,000 ரூபாய்க்காக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தை காவல்துறையினர் மீட்டனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பில்லூர் பகுதியில் சங்கையா காளீஸ்வரி தம்பதியினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் இல்லாமல் சங்கையா வீட்டில் வறுமையில் வாழ்ந்துள்ளனர். அப்போது காந்தி என்பவரிடமிருந்து 50,000 ரூபாய் பணத்தை குணசேகரன் என்பவர் பெற்று சங்கையாவிடம் கடனுக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக் கொண்ட சங்கையாவுக்கு கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை அமைந்தது. அதனால் கடனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

50 லட்சம் மதிப்பிலான பொருட்கள்… வேதனையில் வாடும் தொழிலாளர்கள்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

பேருந்து போக்குவரத்து வசதி இல்லாததால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தேங்கி உள்ளது என வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் மண்பானை மற்றும் கடம் செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் கோடைக்காலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தப்படும் மண்பானைகள், பொங்கல் பானைகள், மண் கூஜாக்கள், அகல் விளக்குகள் மற்றும் அலங்கார மண்பாண்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீங்க ரொம்ப கவனமா இருக்கணும்… வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் முக்கிய சாலையான வாடியார் வீதி, பேருந்து நிலையம் பின்புறங்களில் ஜவுளிக் கடைகளை திறந்து உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் 4 கடைகளை பூட்டி சீல் வைத்ததோடு அபராதம் விதித்துள்ளனர். தற்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பண்டைய கால பயன்பாடு… கண்டெடுக்கப்பட்ட பாசி மணிகள்… ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு…!!

அகழ்வாராய்ச்சியின் போது 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. இது பண்டைய காலத்தில் வாழ்ந்த  தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. இங்கு ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் கீழடியில் அகழாய்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நான்கு பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பாசி மணிகளில் ஒன்று சிவப்பு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேணும்னா கேளுங்க… மக்களின் விபரீத முயற்சி… தடுத்து நிறுத்திய அதிகாரிகள்…!!

அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைக்க முயன்ற மக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சன்னதி புதுக்குளம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு காலனி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது இடியும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து அரசுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க கேட்குறத செய்யுங்க… பிச்சை எடுக்கும் போராட்டம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் இந்த போராட்டத்தில் முன்னணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய முதியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமாஞ்சோலை கிராமம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூவந்தி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பதும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதிபட்டி பகுதியில் மைதீன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் மைதீனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மைதீன் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட் […]

Categories

Tech |