அ.தி.மு.க.வினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஜோசப் பள்ளியில் 11-வது வார்டிற்கான வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பூத் சிலிப் வினியோகம் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பிரகாஷ், ரெக்ஸ் ஆண்டோ , ஜேசு ராஜன் ஆகியோரை பாட்டில்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் […]
