கியாஸ் ஏற்றி சென்ற டேங்கர் லாரி வீட்டிற்குள் புகுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி கியாஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டத்திலுள்ள சக்கரப்பட்டி பகுதியில் வசித்து வரும் நமச்சிவாயம் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் டிரைவர் நமச்சிவாயம் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஓமலூர் பகுதியில் வசித்து வந்த அம்சவேணி என்பவருக்கு சொந்தமான வீட்டிற்குள் லாரி புகுந்தது. […]
