ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மையப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் கடந்த மாதம் 17-ஆம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அவர்கள் வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் கொள்ளையர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று […]
