பெண் தனது 6 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் கோபால்- மரகதம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 6 பிள்ளைகளுடன் வந்த மரகதம் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். […]
