கோட்ட அலுவலகம் முன்பாக மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மின்வாரியத்துறை சார்பாக மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் தலைமை தாங்கியுள்ளார். இதில் உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர்கள் சிவப்பிரியா, ஜெயபாரதி மற்றும் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இவ்விழாவில் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மின் விளக்குகள் மற்றும் […]
