Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திருவிழாவிற்கு எதிர்ப்பு…. இரு தரப்பினரிடையே மோதல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

திருவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி கிராமத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு தரப்பினரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்க சென்றுள்ளனர். இதனை அடுத்து அந்தப் புகாரில் பூதேரி கிராமத்தில் அம்மன் கோவிலில் திருவிழா செய்து சாமி கும்பிட சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆதலால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறுதிமொழி ஏற்பு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. அதிகாரிகள் பங்கேற்பு….!!

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து பணியாளர்களும் எடுத்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியின் நகராட்சியில் வைத்து தீண்டாமை ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகராட்சியின் ஆணையரான பரந்தாமன் என்பவர் தலைமை தாங்கி தீண்டாமைகளின் ஒழிப்பிற்கான உறுதிமொழியை வாசித்துள்ளார். இதை பின்தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இவற்றில் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரக்கன்றுகள் நட வேண்டும்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…. ஆட்சியரின் உத்தரவு….!!

வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அவரிடம் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாளிக்கால் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் சுரேஷ் என்பவருக்கும் இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுரேஷ் தவறான வார்த்தைகளால் பேசி கைகளால் செல்வியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி செல்வி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உறுதிமொழி ஏற்பு…. சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆட்சியரின் செயல்….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி தீண்டாமை உறுதிமொழியை வாசித்துள்ளார். இதில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், துணை ஆட்சியர்கள் சேகர், இளவரசி சத்ய பிரசாத் மற்றும் மணிமேகலை, தாசில்தார்கள் விஜயகுமார் மற்றும் பாபு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட ஒழுங்கு ஆலோசனை…. விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்…. சூப்பிரண்டின் ஆய்வு….!!

தேர்தல் பாதுகாப்பு பணிகளை காவல்துறை சூப்பிரண்டு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் குறித்த பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர் நகராட்சி ஆணையாளரான சதீஷ்குமாரிடம் உதவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர் குற்ற செயல்கள்…. சூப்பிரண்டின் பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புகானா பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்ததால் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்‌. இதனையடுத்து ஆனந்தராஜின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் படி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவில் வரவிருக்கும் தேர்தல்…. தீவிரமாக நடைபெற்ற பாதுகாப்பு பணிகள்…. சூப்பிரண்டின் ஆய்வு….!!

தேர்தல் பாதுகாப்பு பணிகளை காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார். ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் கலவைப் பேரூராட்சியில் நடைபெறும் தேர்தல் குறித்த பணிகளை காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் ஆய்வு செய்துள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கி 2 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஓடை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு மலையடிவார முட்புதரில் 2 நபர்கள் பதுங்கி இருந்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் சாராய விற்பனை செய்ததாக காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கைதான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

33 லட்ச ரூபாய் மதிப்பு…. சிறப்பாக நடைபெற்ற திறப்பு விழா…. எம்.எல்.ஏ-வின் செயல்….!!

33 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம் திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டியநல்லூர் ஊராட்சியில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பூங்கா திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணிரகுராம்ராஜு தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நாகராஜ் மற்றும் சோளிங்கர் ஒன்றிய குழு தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி மன்ற துணை தலைவர் அரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆய்வகம் திறப்பு…. முன் அனுமதி வாங்க வேண்டும்…. ஒன்றிய குழு தலைவரின் செயல்….!!

அரசு பள்ளியில் 12 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஆய்வகத்தை ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசு நிதி ஆயோக் உதவி மூலமாக 12 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் அடல் டிங்கரிங் ஆய்வகத்தை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆய்வகம் இம்மாவட்டத்திலேயே முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இவை பள்ளிக்கு கிடைத்த கூடுதல் சிறப்பு. இதனையடுத்து இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடியரசு தின விழா…. தியாகிகளுக்கு நினைவு பரிசுகள்…. ஆட்சியரின் செயல்….!!

குடியரசு தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து 73-வது குடியரசு தின விழா நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் 18 அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 338 நபர்களுக்கு பாராட்டு சான்றுகளையும், 119 காவல்துறையினருக்கு தமிழக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரியின் மூலமதகு சீரமைப்பு…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. விவசாயிகள் பங்கேற்பு….!!

ஏரியின் மூலமதகு சீரமைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் இருக்கும் பெரிய ஏரியின் மூலமதகு சீரமைப்பு குறித்து வேலூர் நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் ரமேஷ் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. அப்போது விவசாயிகள் ஏரி கால்வாய் தண்ணீர் கொண்டு விவசாயம் செய்துள்ளனர். அதனால் ஏரியில் இருக்கும் தண்ணீரை கடைவாசல் வழியாக வெளியேற்றாமல் மதகுகள் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்கு சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆணைமல்லூர் கிராமம் நடுத்தெருவில் குறளரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் வாலாஜா டோல்கேட்டுக்கு வந்து அங்கு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலைக்கு கம்பெனி பேருந்தில் சென்று வந்திருக்கிறார். பின்னர் குறளரசன் வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது தென்கடப்பந்தாங்கல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாராய விற்பனை…. காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாம்பசிவபுரம் பகுதியில் வசிக்கும் அருள் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து  இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏன் இன்னும் வரவில்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

முதியவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் நாகூரான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நாகூரான் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவர் சின்ன தேவதானம் ரோட்டில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவன்-மனைவி இடையே தகராறு…. கர்ப்பிணி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

7 மாத கர்ப்பிணி பெண் கொசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் ராணுவ வீரரான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மோனிகா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பின்னர் திருமூர்த்தி ஒரு மாத கால விடுப்பில் வீட்டிற்கு வந்த போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த மோனிகா வீட்டில் வைத்திருந்த கொசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கூட்டமாக சுற்றும் நாய்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

கூட்டமாக சுற்றி திரிகின்ற நாய்களால் வேலைக்கு சென்று வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும் புலி கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், நூலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் போன்றவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் இளைஞர்கள் பலர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இதனை அடுத்து இவர்கள் வேலை முடித்து விட்டு இரவில் வீடு திரும்பும் போது தெருநாய்கள் கும்பலாக ரோட்டில் அங்குமிங்கும் ஓடி விபத்து ஏற்படுத்துகின்றது. பின்னர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போதுமான ஆக்சிஜன் இல்லை…. ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்…. பொதுமக்கள் அச்சம்….!!

ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வி.சி மோட்டூர் ஊராட்சி நெடுஞ்சாலையை ஒட்டி ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்கு அதே கிராமத்தில் வசிப்பவர்கள் ஏலம் எடுத்து மீன்களை ஏரியில் வளர்க்கின்றனர். அதன்பின் இந்த மீன்களை விற்பனையும் செய்து வருகின்றனர். இதனை அடுத்து ஏரியில் 20 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நிலையில் அவை மர்மமான முறையில் திடீரென இறந்துள்ளது. இதுபற்றி ஏரியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடிபோதையில் சென்ற முதியவர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்காரம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த திருவிழாவை பார்த்து விட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிங்காரத்தை அந்த வழியில் சென்றவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோதனை குடும்பத்தினர்….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் லாலுபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதுபற்றி இவரது சகோதரர் கேட்டுள்ளார். அதன்பின் வீட்டை விட்டு வெளியே சென்ற லாலுபிரசாத் மன உளைச்சலில் விஷம் குடித்து விட்டு வீட்டின் முன்பாக மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பகலில் முகப்பு விளக்கு…. கடும் பனிப்பொழிவு…. வாகன ஓட்டிகள் அவதி….!!

பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குளிரும், பனிப்பொழிவும் அதிக அளவில் இருக்கின்றது. இந்நிலையில்  அப்பகுதிகளில் அருகில் இருப்பவர்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு கொட்டியது. இதனால் கார், லாரி மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் பனி படர்ந்து இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து வாகனங்களில் ஒய்பைர் போட்டபடி ஓட்டுநர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடுத்தடுத்து திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் வேலு, குப்பு மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் வீட்டில் வைத்திருந்த பீரோ, இரும்பு பெட்டிகளை உடைத்து கொலுசு, லேப்டாப், 2000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக 3 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதிதாக கட்ட வேண்டும்…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

ஓடை கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தகரகுப்பம் ஊராட்சியில் 10 கிராமங்கள் அமைந்திருக்கிறது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் கொடைக்கல், லாலாபேட்டை, ரெண்டாடி ஆகிய கிராமங்களுக்கும், கல்லூரி  மாணவ-மாணவிகள் வாலாஜா உள்பட 4 நகரங்களுக்கும் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் லாலாபேட்டை பகுதியில் இருக்கும் சிப்காட் தொழிற்சாலைக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இதில் ஊராட்சியில் இருந்து ஒரு நாளைக்கு 200-யிலிருந்து 300 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்டவாளத்தை கடந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொலையா, தற்கொலையா….? கிணற்றில் கிடந்த சடலம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

கால், கைகள் கட்டப்பட்ட நிலையில் வியாபாரி கிணற்றில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை யாதவ தெருவில் அரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அரங்கநாதன் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அதே பகுதியில் இருக்கும் கிணற்றில் அரங்கநாதன் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து அவருடைய கால், கைகள் கயிற்றால் கட்டப்பட்டும், சட்டை பாக்கெட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகமா இருந்துச்சு…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கும்பினிப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாட்டர் சர்வீஸ் அருகில் சந்தேகப்படும் படியாக வந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கைனூர் கிராமத்தில் வசிக்கும் நவீன் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நவீனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகவேடு பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் காவல்துறையினரை பார்த்ததும் தப்பி ஒடி உள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குப்பன் என்பதும், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பேச்சாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும்” சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…. ஆட்சியரின் தகவல்….!!

திருக்குறளை பின்பற்றி நடந்தால் சிறந்த நிலைக்கு செல்ல முடியும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருக்குறள் முற்றோதல் செய்த மாணவ-மாணவிகளுக்கும், காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் சிரமம்…. அதிகாரிகளின் செயல்….!!

நடைபாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார்கள் தெரிவித்து, நகராட்சி அதிகாரிகள் பெயரளவுக்கு மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாக்குவதும் தொடர் கதையாகவே நடந்து வருகின்றது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மதுவில் மருந்து கலந்து விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுவுடன் மருந்து கலந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலபுலம்புதூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரமேஷை கைது செய்து அவரிடம் இருந்த 10 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரை விசாரணை நடத்தியதில் அவர் டாஸ்மாக் கடையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உங்களுக்கு காய்ச்சல் இருக்கா…. தீவிரமாக நடைபெற்ற பணி…. அதிகாரியின் செயல்….!!

7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள ஆயர்பாடி ஊராட்சியில் வசிக்கும் 7 வயது சிறுவனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து சிறுவன் வசிக்கும் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் அடித்த துர்நாற்றம்…. சடலமாக கிடந்த வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

பூட்டிய அறைக்குள் வியாபாரி இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிபேட்டை மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கெமிக்கல் வியாபாரம் செய்து வந்த நிலையில் இருதய கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அதன்பின் திடீரென இவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெற்ற விழா…. வீரர்களுக்கு இனிப்பு…. அதிகாரிகளின் பங்கேற்பு….!!

தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் வைத்து நிறுவன தினவிழா கொண்டாடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் இருக்கும் தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் வைத்து 17-ஆவது ஆண்டு நிறுவன தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இதில் சீனியர் கமாண்டன்ட் ரேகா நம்பியார் தேசிய பேரிடர் மீட்புப் படையின் கொடியை ஏற்றி வைத்து வீரர்களுக்கு இனிப்பு வழங்கி உரையாற்றியுள்ளார். இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் மீட்புப் படையின் தலைமை இயக்குனர் அதுல் கர்வால் மற்றும் டெல்லியில் இருந்து காணொலி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயம் திறக்கக் கூடாது…. செய்திக்குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

முன்று நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, இம்மாவட்டத்தில் மாநில வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் இருக்கும் மதுக்கூடங்கள் ஆகியவற்றை வருகின்ற 15-ஆம் தேதி, 18-ஆம் தேதி மற்றும் 26-ஆம் தேதி மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“முழு ஊரடங்கு” தமிழக அரசு உத்தரவு…. வெறிச்சோடிய சாலைகள்….!!

முத்துக்கடை 4 வழி சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் பனப்பாக்கம் உள்பட 7 பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதன்பின் சாலைகளில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். பின்னர் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“வீட்ல வேலை செய்ய மாட்டியா” மாணவி எடுத்த விபரீத முடிவு…. உறவினர் புகார்….!!

மன உளைச்சலில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாகவெளி பெரிய தெருவில் ஆயம்மா என்பவர் வசித்து வருகிறார். இவரின் உறவினர் மகளான ஆனந்தி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் பெற்றோர் இறந்து விட்டதால் அவரை ஆயம்மா தன்னுடன் வைத்து வளர்த்து வந்திருக்கிறார். அப்போது வீட்டில் வேலை செய்யாததால் ஆயம்மா ஆனந்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் தயாரா இருக்கு…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…. ஆட்சியரின் தகவல்….!!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி மாவட்ட கலெக்டர் கூறியதாவது, ஒமைக்ரான் மிக விரைவாக பரவி வரும் தொற்றாக இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அதன்பின் வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாதவர்களை அனுமதிக்கக்கூடாது எனவும், குளிர் சாதனங்களை உபயோகிக்க கூடாது என்றும், உணவகங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேன்-லாரி மோதல்…. 15 பேர் படுகாயம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!

வேன் நிலைதடுமாறி லாரி மீது மோதியதால் 15 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்காக ஆட்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று எம்.பி.டி சாலையில் சென்றுள்ளது. அப்போது வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்ததால் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் வேனில் இருந்த முரளி உள்பட 10 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தமாக 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து படுகாயம் அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கஞ்சா விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. ஆட்சியரின் உத்தரவு….!!

சிறையிலிருக்கும் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அப்பகுதியில் துணை காவல்துறை சூப்பிரண்டு பிரபு தலைமையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்காடு வேல்முருகேசன் தெருவில் வசிக்கும் சதீஷ் என்பவரை கஞ்சாவோடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள்…. சிறப்பாக நடைபெற்ற முகாம்…. ஆட்சியரின் ஆய்வு….!!

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” கடைகளில் திடீர் சோதனை…. காவல்துறை சூப்பிரண்டு எச்சரிக்கை….!!

கஞ்சா மற்றும் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்துறையினர் அனைத்து கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்காவை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவின் படி, அனைத்து பகுதிகளிலும் இருக்கும் கடைகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நரோசிஜிராவ் பகுதியில் இருக்கும் மளிகை கடை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 27  கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக சிவராம் என்பவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கட்டாயம் அணிய வேண்டும்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. காவல்துறை சூப்பிரண்டின் செயல்….!!

கொரோனா விழிப்புணர்வு பணிகளை காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் கலவை பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த கொரோனா விழிப்புணர்வு பணிகளை அவர் ஆய்வு செய்துள்ளார். இதனை அடுத்து பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கும் முககவசம் வழங்கியதோடு, கபசுரக் குடிநீரையும் அவர் வழங்கியுள்ளார். அப்போது அவருடன் கலவை இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, சரவணமூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. சடலமாக கிடைத்த அவலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…‌.!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு பகுதியில் முனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், கவி மற்றும் ஜெகதீஷ் என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலிகால் பகுதியில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு இவர்கள் புத்தாண்டை கொண்டாட வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஜெகதீஷ் கால் தவறி எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திரும்பவும் வேலை வேண்டும்…. கிணற்றில் கிடந்த சடலம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

நகராட்சியில் பணிபுரிந்த பெண் ஊழியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றில் இருந்த ஜோதியின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை அடுத்து இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் இன்னும் சாகவில்லை…. நிராகரிக்கப்பட்ட மனு…. முதலமைச்சருக்கு புகார்….!!

மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதால் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் இவருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தனது கிராமத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் நிலையில், தனக்கு மட்டும் உதவித்தொகை வழங்காததினால் தபால் அலுவலகம், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கட்டாயம் அணிய வேண்டும்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. காவல்துறை சூப்பிரண்டின் செயல்….!!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார். அப்போது கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்…. போக்குவரத்து பாதிப்பு…. போலீஸின் செயல்….!!

2 லாரிகள் நேருக்கு நேர் மோதியதால் சிப்காட் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் சாலையில் பெங்களூரிலிருந்து கேஸ் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்த டேங்கர் லாரியும், அதே போல் பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரிகளை ஓட்டி வந்த கவுடா, சின்னராசு ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். பின்னர் இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயம் அணிய வேண்டும்…. தடுப்பு நடவடிக்கைகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கடைவீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்துள்ளார். அப்போது பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் முககவசம் வழங்கி கட்டாயமாக அணிய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுப் பவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சிறப்பாக நடைபெற்ற விழா…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. அதிகாரிகளின் தகவல்….!!

கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற பெருவிழாவில் சேர்ந்த காணிக்கை பணத்தை கோவில் அதிகாரிகள் எண்ணி உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நரசிம்மர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கார்த்திகை மாதத்தில் நடைபெற்ற விழாவில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் நரசிம்மர் சாமியை தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதனையடுத்து நரசிம்மர் கோவில்களில் இருக்கும் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். பின்னர் கோவில் இணை ஆணையர் ஜெயா, ஆய்வாளர் பிரியா, […]

Categories

Tech |