தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர் முகாமில் கூலித் தொழிலாளியான முருகையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முருகையாவை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முருகையா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
