ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த மரவட்டி வலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருவுற்ற ரம்யா அப்பகுதிக்கு அருகாமையில் உள்ள உச்சிபுளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பிரசவத்திற்கான சிகிச்சையை தொடர்ச்சியாக பதிவு […]
