ராமநாதபுரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை 3000 க்கும் மேல் அதிகரித்துள்ளது. ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்று முன்தினம் இரண்டாயிரத்து 956 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 60 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். நேற்று புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், […]
