தாசில்தார் நடத்திய சோதனையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கடம்பூர் கிராமத்தில் மணல் கொள்ளை நடப்பதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் மணல் திருட்டை தடுக்கும் வகையில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல்முருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருசுழி ஆற்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக […]
