புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா குறித்து பதாகைகளை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் வீரரெத்தினம் என்பவர் வசித்து வருகிறார். தன்னார்வலரான இவர் ஊரடங்கு காலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை இருசக்கர வாகனத்தில் முன்பு வைத்துக்கொண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றி வந்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இதுக்குறித்து அவர் கூறுகையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கந்தர்வகோட்டை சட்டமன்ற […]
