மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு கும்பகோணத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை வழியாக சென்று கொண்டிருந்த போது முகமது என்பவர் ஓட்டி […]
