Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை ( 11ஆம் தேதி ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ..!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் டிப்ளமோ படித்து முடித்த கோகுலவிஜயன்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கோகுல விஜயனும் அதே பகுதியில் வசிக்கும் ஹேமமாலினி(21) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய சரக்கு வேன்…. பிளஸ்-2 மாணவர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உண்டார்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கதிரவனுக்கு பிறந்தநாள். இதனால் கதிரவன் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விறகு பொறுக்க சென்ற தொழிலாளி பலி…. உடலில் இருந்த அடையாளங்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காடகநல்லி மலை கிராமத்தில் சித்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்துவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் சித்து காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது பெருமடுவு பள்ளம் அருகே […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள்…. வலைதளத்தில் போலி வதந்திகள் பரவுவதாக பரபரப்பு புகார்…!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: மதுரை பட்டாசு ஆலை விபத்து ; பலியான 5 பேர் யார் யார் ?

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி பட்டி அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த வெள்ளைப்பவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு குடோன்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் ஐந்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ள சூழலில் ஒருவர் உடல் ஆங்காங்கே தலை, உடல் பகுதி, கால் பகுதி என தென்னந்தோப்பு பகுதிகளில் சிதறி கிடக்கின்றன. இதில் வடக்கம்பட்டியை சேர்ந்த அமாவாசி, வல்லரசு, […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து – பெண் உட்பட 5 பேர் உடல்சிதறி பலி..!!

மதுரை திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பட்டாசு வெடித்ததில் அந்த கட்டிடமே சுக்கு சுக்காக சிதறியது.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“எங்க கிட்டயே பில் கேட்கிறீயா”….. தனியார் ஹோட்டல் சப்ளையரை அடித்து உதைத்த வாலிபர்கள்…. பதற வைக்கும் சம்பவம்…!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் தனியார் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேவலுர் குப்பம் பகுதியில் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என மொத்தம் 6 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சென்று சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறிய சப்ளை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பில் கொடுத்துள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் எங்களுக்கு பில் கொடுக்கிறாயா? என்று கூறி சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்ய முயன்ற விவசாயிக்கு…. நேர்ந்த முடிவு…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோணங்கிஅள்ளி பகுதியில் முனுசாமி என்ற விவசாயி வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் மின் மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் முனுசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இவரின் சத்தம் கேட்ட அக்கப் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இடம்…. யாருடையது தெரியுமா….? அறநிலையத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மடம் ஒன்று தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் திருத்துறைபூண்டி சைவ செட்டியார்கள் குத்தகைக்கு எடுத்து முறையாக கோவிலுக்கு பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார். தற்போது இந்த இடம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடத்தை எழுப்ப […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பரிமள ரங்கநாதர் கோவில்…. சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய துலா உற்சவம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவிளந்தூர் பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த துலா உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த துலா உற்சவம் நடைபெறும். காவிரி நதியை மையப்படுத்தி நடக்கும் இந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலையில் கொடி மரத்திற்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து கருட கொடியை ஏற்றியுள்ளனர். மேலும் வருகின்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிவறையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர்…. நொடி பொழுதில் ஏற்பட்ட மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் தென் சோலை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42). இவர் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் நேற்று காலை சரவணன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில் நவம்பர் 12 முதல் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இளைஞர்களே ரெடியா….? “தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகின்றது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளி) காலை 10:30 மணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நுகர்வோர் பேரவை சிறப்பு விருது”… தட்டிச் சென்ற டி.சி டபிள்யூ நிறுவனம்….!!!!!

சிறப்பு விருந்து டிசி டபுள்யூ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக நுகர்வோர் பேரவையின் சார்பாக வருடம் தோறும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான தமிழ்நாடு நுகர்வோர் பேரவை சிறப்பு விருது சுற்றுப்புற சூழல், தொழிலாளர்களுடன் இணக்கமான உறவு, பொதுமக்களுடன் நல்ல உறவு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் சாகுபுரம் டி.சி டபிள்யூ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விருதை மாநிலம் நுகர்வோர் பேரவை தலைவர் வழங்க நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன் பெற்றுக்கொண்டார். இந்த  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக திருவள்ளூரை மாற்ற வேண்டும்” … மக்களிடம் கேட்டுக் கொண்ட ஆட்சியர்…!!!!!

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம் சார்பாக முதல்வரின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டு இருக்கும் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது, இந்த எந்திரத்தின் மூலம் ரூபாய் பத்து செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளலாம். திருவள்ளூரில் ஒரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம்… பயன்பெற்ற ஏராளமான மக்கள்..!!!!!

வானரமுட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புத்தூரில் இருக்கும் வானரமுட்டி கிராமத்தில் உள்ள  தொடக்கப் பள்ளி சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இம்முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். இதன் பின் டாக்டர் சுகஸ்ரீ குணசேகரன் பங்கேற்று இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகளை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Justin: கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் NIA திடீர் சோதனை…!!!!

கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கோவையில் காரில் கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் இந்த சோதனை நடந்து வருகிறது. கோட்டைமேடு, ரத்தினபுரி, உக்கடம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், ரத்தினபுரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க மறந்துட்டீங்களா?”…. கால அவகாசம் நீட்டிப்பு…. ஆட்சியர் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்…!!!!!

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் 2022-23 கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு புதுப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி வரை கால […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. இன்று ஒரு நாள் மட்டும் இதற்கு தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!

முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வர் அவர்கள் வழங்க இருக்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விதிகளை மீறி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டால் சட்ட விதிகளின்படி காவல் துறையால் கையகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எனக்கு தற்கொலை செய்ய அனுமதி தாங்க”…. மனு கொடுத்த தூய்மை பணியாளரால் பரபரப்பு….!!!!!!

தூய்மை பணியாளர் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சென்ற சில மாதங்களாக எனக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவு, மருத்துவச் செலவு ஆகியவைக்கு பணம் இல்லாமல் தவிர்த்து வருகின்றேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்…. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எழுந்த புகார்…. ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்… மரத்தை அகற்றாமல் கட்டப்பட்ட தடுப்புச் சுவர்…. நடவடிக்கை…!!!!!

நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது மரத்தை அகற்றாமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பதை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணியானது சென்ற இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றது. இதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுஞ்சாலை ஓரம் கட்டப்படும் பாலம் மற்றும் தடுப்புச் சுவர்கள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை சேலம் கண்காணிப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கர்நாடக அரசின் நடவடிக்கை…. கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியல…. விவசாயிகள் பாதிப்பு…!!!!!!

நீலகிரியில் கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் பயிரிட்ட கொய்மலர்களை கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருக்கும் கொய்மலர் மொத்த விற்பனை சந்தைக்கு கர்நாடக அரசு சீல் வைத்திருக்கின்றது. இதனால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி செய்த கொய்மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றார்கள். இது பற்றி நீலகிரி மாவட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த பெற்றோர்…. சடலமாக தொங்கிய வாலிபர்…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி ரயில்வே நகரில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தீபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீபன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான கல்லூரி மாணவி…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டு தெருவில் கட்டிட தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணா(19) என்ற மகள் உள்ளார். இவர் கடலூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருணா திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பாபு தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் பாபு காவல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கும்மங்குளம் பகுதியில் விவசாயியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நட்சத்திரமேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயராஜ் தனது வயலுக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஜெயராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜெயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு…. லாரி ஓட்டுநரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கம்பம் தெருவில் லாரி ஓட்டுனரான கதிரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கதிரேசனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கதிரேசன் தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதிரேசனை மீட்டு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்று…. கால்கள் துண்டான நிலையில் மீட்கப்பட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ரயில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில் நிலைய 3-வது நடைமேடையை அடைந்து பிறகு புறப்பட்டது. அப்போது ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்று எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதனால் கால்கள் துண்டான நிலையில் படுகாயத்துடன் கிடந்த அந்த நபரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து….. தொழிலாளி பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கன்னங்குளம் பகுதியில் முருகன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் நாகமல் என்பவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் மன்னார்புரத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் இடி விழுந்ததால்…. 20 வாத்துகள் பலி; அதிர்ச்சியில் 300-க்கும் மேற்பட்டவை மயக்கம்….!!!!

இடி விழுந்த அதிர்ச்சியில் 20 வாத்துகள் இறந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு பகுதியில் சின்ன அழகு, நல்ல கண்ணு ஆகியோர் வயல்வெளியில் 2000-க்கும் மேற்பட்ட வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அந்த பகுதியில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் நல்ல கண்ணுவும், சின்ன அழகுவும் மரத்தடியில் ஒதுங்கி நின்றனர். இதனையடுத்து இடி விழுந்து 20 வாத்துகள் அதிர்ச்சியில் இறந்தன. மேலும் 300-க்கும் மேற்பட்ட வாக்குகள் மயங்கி விழுந்ததால் இருவரும் அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

whatsapp-ல் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய நபர்…. அதிர்ச்சியடைந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் கணபதி மில் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் போடுவதால் 30 வயது பெண்ணின் செல்போன் எண் செல்வக்குமாரிடம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களாக செல்வகுமார் பெண்ணின் செல்போனுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் செல்வகுமாரை பலமுறை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஆபாசமாக பேசி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை மற்றும் தென்காசியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை…. அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….!!!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக சேர்வலாறு, பாபநாசம் அணைகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் கனடியன் கால்வாய், மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி, அம்பை, களக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் சாலையில் இருக்கும் வயலில் பச்சிராஜன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதால் பச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த வேலு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேருந்தில் பயணித்த நபர்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவில் ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளால் சிரமப்பட்ட ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிமூலம் சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

3 பேரை கடித்து குதறிய கரடி…. திடீரென இறந்ததன் காரணம் என்ன…? பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி மசாலா பொடி வியாபாரியான வைகுண்டமணி(58), அதே பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்(56), அவரது சகோதரர் சைலப்பன்(50) ஆகியோரை கடித்து குதறியது. இதனால் முகம் சிதைந்து படுகாயமடைந்த மூன்று பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று கரடியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காததால் வேதனை…. விவசாயி தற்கொலை முயற்சி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

நில ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரக்கத்தண்டலம் பகுதியில் வசித்து வரும் தனபால் என்பவர் எறையூர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது தந்தை ஆறுமுகத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக தனபால் கையில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை கைப்பற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசை பார்த்ததும் தப்பியோட்டம்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கஞ்சா பொட்டலங்களுடன் தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பா. சீபாஸ் கல்யான் உத்தரவின்படி காவல்துறையினர் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் காவல்துறையினர் நரசிங்கபுரம் சுடுகாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் போலீசார் இருப்பதை கண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தங்கை மகளின் “மஞ்சள் நீராட்டு விழா”…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் பால சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளங்குமார்(33) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இளங்குமாருக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி இல்லாததால் நெய்வேலியில் நடைபெற்ற தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் இளங்குமார் மன உளைச்சலில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை” இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மருதம்பட்டி காலனியில் கொத்தனாரான முகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷிவானி, ரிதன்யா ஸ்ரீ என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜோதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மயக்கம் செலுத்திய சிறிது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கொளக்குடி கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது சாதிக்(19) என்ற மகன் உள்ளார். மளிகை கடையில் வேலை பார்த்த முகமது சாதிக்கிற்கும் ஒன்பதாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சாதிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனை கரம்பிடிக்க இருந்த நிலையில்…. சிதைந்து போன கல்லூரி மாணவியின் வாழ்க்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை அருகே இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் சாவில் திடீர் திருப்பம்….. மகன், மகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ஆறுமுகம் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விண்ணப்பங்கள்” அனுப்பியும் பலனில்லை….. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இடையான்குடி பகுதியில் இன்ஜினியரிங் பட்டதாரியான பிராங்கிளின் ஆரோன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக சொந்த ஊரில் வேலை தேடிய ஆரோன் 2 மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூருக்கு வந்து விட்டார். இந்நிலையில் சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலை தேடிய போது தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேறு வழி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

19 பதக்கங்களை வென்று சாதனை…. அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேட்டுதிருக்காம்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் 10 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் மாநில அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிக்கு மாணவிகள் தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கனகராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் அமுதா, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. விபத்தில் சிக்கி மூதாட்டி பலி; 6 பேர் காயம்…. கள்ளக்குறிச்சியில் கோர விபத்து…!!!

கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் பொன்னம்மாள் உள்பட குடும்பத்தினர் 7 பேருடன் குலதெய்வம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை ஐயப்பன் என்பவர் ஓட்டி உள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் […]

Categories

Tech |