Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மின் இணைப்பு வேணும்னா ₹4,000 லஞ்சம் கொடு”…. லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி…. கோர்ட் தீர்ப்பு…!!!!!

மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் கல்லூரி சாலையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று 2016 ஆம் வருடம் விண்ணப்பித்திருக்கின்றார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் என்பவர் கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுப்பதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண் எரித்து கொலை…. சிசிடிவி காட்சியால் சிக்கிய நபர்…. சென்னையில் பயங்கர சம்பவம்….!!

பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புதுப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சுகன்யா என்பவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சுகன்யா புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இவரது கணவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி இரவு நேரத்தில் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகன்யா, அருண், லெனின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு…. அரசு பள்ளி மாணவர்களின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் காயிதே மில்லத் பள்ளியில் மாவட்ட அளவிலான வளையபந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறுமளஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் இளையோர் ஆண்கள் பிரிவில் மகேஷ், விஜயராஜா, மூத்தோர் பெண்கள் பிரிவில் கீர்த்திகா, நந்திதா ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் விளையாட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செல்லா என்பவர் வசித்து வருகிறார் இவர் விமான நிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு அரிசி ஆலையில் வேலை பார்த்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முனியனின் மனைவி ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் பணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி…. இடிபாட்டில் சிக்கி பலியான ஓட்டுநர்…. சென்னையில் கோர விபத்து….!!!

சாலையோரம் நின்ற வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனுமன் பேட்டை வள்ளலார் தெருவில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜோதி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஜோதி கார் உதிரி பாகங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர் பொருட்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“72 லட்ச ரூபாய் மோசடி” அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி கைது….. பரபரப்பு சம்பவம்…!!!

பண மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் தண்டுரை மாரியம்மன் கோவில் தெருவில் கட்டிட ஒப்பந்ததாரரான சீனிவாசன்(49) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பகுதியில் இருக்கும் அரசினர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் பிச்சாண்டி(53) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ரயில்வே துறையில் இருக்கும் உயர் அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் வேலை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“காபி வித் கலெக்டர்”…. மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி….!!!!!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுடன் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். அப்போது ஆட்சியர் கூறியதாவது, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

15 வருஷமா பேருந்து இல்லை…. 4கி.மீ நடந்தே செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்… கிராம மக்கள் கோரிக்கை…!!!!!

15 வருடங்களாக பேருந்து இல்லாததால் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று மாணவ-மாணவிகள் படித்து வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவலாங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இந்த ஊராட்சி ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள நிலையில் அரசு பள்ளிகள் ஏதும் இல்லை. இதனால் கல்வி கற்பதற்காக மாணவர்கள் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றார்கள். மேலும் கல்லூரி படிக்கும் மாணவர்களும் ஆற்காடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் தொங்கியப்படி பயணம்…. நடவடிக்கை எடுப்படுமா…? மக்களின் எதிர்பார்ப்பு…!!!!

கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதுபோல பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, வல்லம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

”பாலே இங்க தேறல, பாயசம் கேக்குதா…?” விடுமுறை கேட்டவருக்கு மாவட்ட ஆட்சியர் பதில்….!!!!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் இன்று 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்துக்கும் விடுமுறை என்று தனியார் செய்தித் தொலைக்காட்சி தவறாக செய்தி வெளியிட்டது. அதை சுட்டிக் காட்டி சந்தேகம் கேட்ட மாணவனுக்கு விருதுநகர் கலெக்டர் மேகநாத் ரெட்டி,”பாலே தேறல, பாயசம் கேக்குதா? நாளைக்கு ஸ்கூல் இருக்கு” என்று காமெடியாக பதிவிட்டுள்ளார். பெரும்பாலும் மழைக்காலம் வந்துவிட்டாலே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இடிந்து விழுந்த காவல்நிலைய மேற்கூரை.. ஆவணங்கள் சேதம்.. விபத்து தவிர்ப்பு…!!!!

விழுப்புரம் காவல் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆவணங்கள் சேதமடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் நகரில் போக்குவரத்து காவல்துறை பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. மேற்கு போலீஸ் நிலையம், நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளிட்டவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்ற நிலையில் போக்குவரத்து காவல்துறைக்கு மட்டும் சொந்த கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகின்றது. தற்போது விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே இருக்கும் பழைய கட்டிடத்தில் போக்குவரத்து காவல் நிலையம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் முக்கிய பகுதிகளில்….. இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக பணங்கள் பூங்கா, வெங்கட்நாராயணா சாலை மற்றும் நந்தனம் பகுதிகளில் நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சாலையில் தற்போது உள்ள ஒரு வழி பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பிலிருந்து பனகல் பூங்காவிற்கு செல்லும் வாகனங்கள் தணிகாசலம் சாலை வெங்கடாநாராயண சாலை வழியாக பனகல் பார்க் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே…. இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனுக்காக மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றன. அவ்வகையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும் நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று  சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மாற்று இடம் அமைத்து தாங்க”… ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த மக்கள்….!!!!!

மாற்று இடம் வழங்க கோரி மக்கள் மனு கொடுத்துள்ளார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு குட்செட் தெருவை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தேனி குட்செட் தெரு பகுதியில் 56 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்ற 46 வருடங்களாக வசித்து வருகின்றோம். ரயில்வே துறை சார்பாக எங்களின் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வகுப்புகள் புறக்கணிப்பு…. 63 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்…. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்..!!!

கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ‌வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 101 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ், செயலாளர் நடராஜன் உள்ளிட்ட கல்லூரியில் பணியாற்றும் 63 கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பறைகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அரசாணை 56 இன் படி நடந்து முடிந்த சான்றிதழ் சரிபார்ப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“செல்போன் தடை உத்தரவு”… “ஆடைக்கு கட்டுப்பாடு”…. திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!!

செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியில் இருந்தபோது பட்டாணி முத்து என்பவர் உயிரிழந்து விட்டார். கருணை அடிப்படையில் இவரின் மகனுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பணியமன ஆணையை வழங்கினார். இதன்பின் அவரிடம் செய்தியாளர்கள், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது குறித்து கேட்டார்கள். அதற்கு அவர் கூறியுள்ளதாவது, முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கயத்தாறு அருகே பெண் போலீஸ் எடுத்த விபரீதம் முடிவு…. காரணம் என்ன…? போலீசார் விசாரணை…!!!!!

கயத்தாறு அருகே பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே இருக்கும் செட்டிகுறிச்சி தெற்கு கோனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவரின் மகள் உமா மகேஸ்வரி. இவர் நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ் ஆக பணியாற்றி வந்தார். இவருக்கும் பரமசிவம் என்பவருக்கும் சென்ற ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. பரமசிவம் பாளையங்கோட்டை சிறையில் வார்டனாக வேலை செய்து வருகின்றார். சென்ற நான்கு வருடங்களாக உமா மகேஸ்வரி உடல் […]

Categories
திருவண்ணாமலை தேசிய செய்திகள் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! ஆதாருடன் வங்கிக் கணக்கு, செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்…. 30-ம் தேதியே கடைசி…!!!

ஆதாருடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பிரதம மந்திரியின் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து நிதி பெறுவதற்கு ஆதார உடன் வங்கி கணக்கு, செல்போன் எண்ணை வருகின்ற 30ஆம் தேதிக்குள் விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் முதல் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தின் பேரில் காரை சோதனையிட்ட போலீசார்…. தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்…. சென்னை சேர்ந்த 3 பேர் கைது…!!!!

ஓட்டப்பிடாரம் அருகே காரில் புகையிலை பொருட்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் பசுவந்தனையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி அதில் இருந்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை செய்தார்கள். மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகம் அடைந்து காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் 1650 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு இன்று (12ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி கிராமத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாயாண்டி என்ற மகன் இருந்துள்ளார். கூலி தொழிலாளியான மாயாண்டி கலியாவூர் செல்லும் சாலையில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற போலீசார் மாயாண்டியின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்…. முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் இருந்த பள்ளி மாணவியிடம் முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம் போட்டதால் பேருந்தில் இருந்தவர்கள் அவரிடம் என்ன நடந்தது என கேட்டனர். அப்போது முதியவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி தெரிவித்தார். இதனால் பயணிகள் முதியவரை பிடித்து சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் முதியவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது குடிக்க வர மறுத்த நண்பர்…. ஆட்டோ ஓட்டுனரின் மூர்க்கத்தனமான செயல்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகாராஜாபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஊரல்கரைமேடு பகுதியில் வசிக்கும் சோமஸ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் சவிதா தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சோமஸ் போதையில் இருந்துள்ளார். அவர் இளையராஜாவை மீண்டும் மது குடிப்பதற்கு அழைத்துள்ளார். அதற்கு தன்னை நாய் கடித்து விட்டது எனவும், மது குடிக்க வரவில்லை எனவும் இளையராஜா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கார்டு…. போதையில் வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பஜாரில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க வந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் கார்டு எந்திரத்தில் மாட்டிக் கொண்டதால் வாலிபர் போதையில் தனது கைகளால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளார். இதனையடுத்து போதையில் வாலிபர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் காலை ஏ.டி.எம் மையத்திற்குள் வாலிபர் படுத்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை..! 26 மாவட்டங்களில் நாளை (12.11.2022) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி.! தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை….. 21 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கல்லூரி மாணவர்களுக்கு 10.39 கோடி கல்வி கடன்..‌. 2 நாட்கள் முகாம்…!!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கல்வி கடன் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு பகுதி சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பயன்பெறுவதற்காக கல்லூரி படிப்பிற்கான கல்வி கடன் பெற சிறப்பு முகாம் சென்ற 2 நாட்களாக நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கல்விக்கடன் பெறுவதற்காக கலந்து கொண்டார்கள். இந்த முகாமில் மொத்தமாக 440 மாணவர்கள் கலந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சகோதரி வீட்டில் தங்கியிருந்த எலக்ட்ரீசியன்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிளாங்கோடு பகுதியில் எலக்ட்ரீசியனான சாம்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது சாம்சன் தடிக்காரன்கோணம் நீதிபுரம் பகுதியில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின் பழுதை சாம்சன் சரிசெய்ய முயன்ற போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சாம்சனை அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை…. நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் நிலை என்ன…? சோகத்தில் குடும்பத்தினர்…. தேடும் பணி தீவிரம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாரதபள்ளி மடத்துவிளை பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பா(60) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று புஷ்பா வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றுக்கு சென்று துணி துவைத்து குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கரையில் புஷ்பாவின் துணிகள் இருந்தது. அவரை காணவில்லை. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்….. கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிழங்குவிளை பகுதியில் பிஜூ (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார் இந்த கடையில் 20 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெண்ணை மிரட்டி அருகில் நிற்க வைத்து பிஜூ செல்போனில் செல்பி எடுத்து வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. தற்போது இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை சரியில்லாததாலும் இனி வேலைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உண்ணாவிரத போராட்டம்” குடும்பத்தோடு டிரைவரை கைது செய்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுங்கான்கடை பரசேரி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனையில் 26 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். தற்போது ஜீப் ஓட்டுனராக வேலை பார்க்கும் அஜித்குமாருக்கு கடந்த சில வாரங்களாக பணி ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பணி ஒதுக்க வலியுறுத்தி அஜித்குமார் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் அஜித்குமார் தனது மனைவி பினு, மகன் அபிஜித், மகள் பிவிஷ்மா ஆகியோருடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொடூரம்…!! “தாயை” உயிருடன் கழிவு நீர் தொட்டியில் போட்டு மூடிய நபர்…. விழுப்புரத்தில் பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அசோதை என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்திவேல் என்ற மகனும், செல்வி என்ற மருமகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி தனது குழந்தைகளோடு பெங்களூருக்கு சென்று விட்டார். இரவு நேரத்தில் அசோதை மண்ணம்மாள் என்பவரது வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. 10 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை….. எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : கனமழை எதிரொலி….. தமிழகத்தில் நாளை (12ஆம் தேதி) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டே வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளம்பெண்ணை டார்ச்சர் செய்த தொழிலாளி…. வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றம் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கருப்பசாமி அதே பகுதியில் வசிக்கும் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து கருப்பசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரண ஜெய ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் கருப்பசாமிக்கு 8000 ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் […]

Categories
சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருவள்ளூர், சென்னை, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் நீர் சூழ்ந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் அதிக கன மழை எச்சரிக்கை விடுத்து வருகின்றன. அந்த வகையில் நாளை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தொடர்ந்து நாளை ( 12/11/2022) சென்னை,  திருவள்ளூர், கடலூர் ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்… நீலகிரியில் முதல் முறையாக.. மருத்துவ படிபிற்கு தேர்வான இருளர் இன மாணவி….!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக இருளர் இன மாணவி மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சூலூர் வட்டம் அடுத்த தும்பிப்பட்டி கிராமத்தில் பாலன் – ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஸ்ரீமதி (20). இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களது மகள் ஸ்ரீமதி கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 406 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவராகி மக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தற்காலிக அனுமதி சான்று திட்டம்…. அதிகாரி ஆய்வு….!!!

போக்குவரத்து சோதனைசாவடிகளில் ஆன்லைன் தற்காலிக அனுமதிசான்று திட்டத்தை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசு சார்பாக மாநில எல்லையில் போக்குவரத்து சோதனைசாவடி அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் இந்த சோதனை சாவடிகளில் தற்காலிக அனுமதி சான்று வழங்கப்படுகின்றது. இதன் மூலம் வரி செலுத்தாத மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகின்றது. இதற்கான தொகை நேரடியாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சோதனை சாவடிகளில் நேரடி பண பட்டுவாடா இல்லாத முறை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தற்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியர்…. காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை…!!!!!

ஆன்லைனில் முதலீடு செய்த தனியார் நிறுவன ஊழியரிடம் 6 1/2லட்சம் மோசடி செய்யப்பட்டு இருக்கின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் நீலிக்கோணம்பாளையத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்து வருகின்றார். இவர் ஆன்லைனில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி முதல் கட்டமாக ரூபாய் ஆயிரம் முதலீடு செய்து இருக்கின்றார். சில மணி நேரத்தில் அவருக்கு 1200 கிடைத்தது. இதன்பின் அந்நிறுவனத்தில் இருந்து பேசிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியாண்டி(19) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முனியாண்டியும், திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 3-ஆம் தேதி முனியாண்டி சிறுமியை கோவையில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் மீது தாக்குதல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

தந்தை மகனை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாடசாமி(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன்(20), ஆகாஷ்(20), நல்லமுத்து(55) ஆகிய 3 பேருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாடசாமி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது நல்லமுத்து, லட்சுமணன், ஆகாஷ் ஆகியோர் மாடசாமியை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாமனார் தற்கொலை வழக்கு…. மருமகனுக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மருமகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரகாசபுரம் பகுதியில் அந்தோணி தாசன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அந்தோணி தாசன் தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு இந்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தோணி தாசனின் 2-வது மருமகன் ஜூலியன் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மாமனாருடன் தகராறு செய்துள்ளார். இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொடூரம் : காதல் மனைவி நடத்தையில் சந்தேகம்…. கணவரின் வெறிச்செயல்…. என்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்…!!!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பகுதியில் வசித்து வருபவர் ஆசிப் இக்பால். இவர் மயிலாப்பூரில் இருக்கும் தனியார் வங்கியில் பணியாற்றிய வருகின்றார். இவரின் மனைவி பிரியங்கா பாட்னா. இவர் போரூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் சென்ற 10 வருடங்களாக காதலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் தற்போது சென்னையில் உள்ள மண்ணடியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை…!!!

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜோலார்பேட்டை அடித்த யூனிவர்சல் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்நிலையில் ஜங்களாபுரம் கூட்ரோட்டில் இருக்கும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அபிஷேக், பிரசன்னா, யாஷினி, மோனிஷ் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து தனிஷ்கா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு…. பாத்திரத்தில் பால் வைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில்குடி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சக்திவேல் வெளியே சென்ற பிறகு லட்சுமி காபி போடுவதற்காக பிரிட்ஜில் உள்ள பாலை எடுப்பதற்கு சென்றுள்ளார். அப்போது பிரிட்ஜ் அருகே நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியது. இதனை பார்த்து லட்சுமி சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். சிலர் கார்த்திகை தினத்தில் நல்ல பாம்பு வீட்டில் படம் எடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்…. சேலையூரில் பொதுமக்கள் அவதி…!!!!

சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள எரப்பாவூர் கிராமத்தில் லாரி ஓட்டுனரான ஜெயவேல்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7- ஆம் வகுப்பு படிக்கும் நித்திஷ், 4- ஆம் வகுப்பு படிக்கும் சூர்யா என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று அண்ணன், தம்பி இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக புது ஏரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக சூர்யா ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் […]

Categories

Tech |