மகன் இறந்த துக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கருணாகரச்சேரி ராமாபுரம் நியூ தெருவில் விவசாய கூலி தொழிலாளியான தனசேகர்(51) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹரிஷ்(17) என்ற மகனும், மவுனிகா(24) என்ற மகளும் இருந்துள்ளனர். மவுனிகாவுக்கு திருமணமாகி கணவன் மற்றும் இரண்டு வயதுடைய மகன் இருக்கிறான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக ஹரிஷ் […]