Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விதை நிலக்கடலையை மானிய விலையில் அரசே வழங்க வேண்டும்… விவசாயி கோரிக்கை..!!!

மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள். அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விருத்தாச்சலத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிள்… நாகையில் ஓட்டும் போலீஸ்காரர்… டிஐஜி-யிடம் புகார்..!!!

விருத்தாச்சலத்தில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை நாகையில் இருக்கும் போலீஸ்காரர் ஓட்டி வருகின்றார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகே இருக்கும் வேட்டைகுடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2018 ஆம் வருடம் ஜூலை 7ஆம் தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் 10ஆம் தேதி விருத்தாச்சலத்தில் உள்ள […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் ரூ.56,000 கொள்ளை…. பெரும் அதிர்ச்சி…..!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் தெரியாததால் அந்த வழியாக சென்ற இளைஞரை அழைத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த இளைஞரும் உதவுவது போல அவரின் நான்கு இலக்க ரகசிய எண்ணை கேட்டறிந்து பதிவிட்டு உங்களது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று கூறி கலைச்செல்வியை ஏமாற்றி அவரிடம் போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உண்மையான கார்டை எடுத்துச் சென்றுள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முதல்வரின் “காலை உணவு திட்டம்”…. சரியாக வழங்கப்படுகின்றதா..? அதிகாரி அதிரடி ஆய்வு..!!!

பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தை அரசு சிறப்பு செயலாளர் கருணாகரன் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் அதிகாரி கருணாகரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அதிகாரி கருணாகரன் கூறியுள்ளதாவது, தமிழக அரசு சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சென்ற 2 நாட்களாகவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் குண்டடம் ஊராட்சியில் ஆய்வு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரேடிசன் புளு ஹோட்டல் உரிமையாளர் மரணம்… காரணம் என்ன…? பெரும் பரபரப்பு…!!!

ரேடிசன் புளு  என்பது இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஐந்து நட்சத்திர உணவகம் ஆகும். சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள, மீனம்பாக்கத்தின் ஜிஎஸ்டி சாலையில் இவ்வுணவகம் அமைந்துள்ளது. இந்நிலையில் ராடிசன் புளூ ஓட்டலின் உரிமையாளரும், தொழிலதிபருமான அமித் ஜெயின் காசியாபாத்தில் உள்ள கிராம சொசைட்டி இல்லத்தில் சடலமாக கிடந்தார். இதனை கண்ட அவரது ஓட்டுநர் டெல்லி மாண்ட்வலி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அமித் ஜெயனின் உடலை மீட்ட போலீசார் தீவிர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெரியார் பல்கலை., துணைப் பதிவாளர் பணி நீக்கம்…. என்ன காரணம் தெரியுமா?…. பரபரப்பு தகவல்….!!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2013 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தொலைதூரக் கல்வியில் உறி அங்கீகாரம் இல்லாத படிப்புகள் நடந்த அனுமதி வழங்கியது, கல்வி தகுதி இல்லாத வெளிமாநில இளைஞர்களுக்கு படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் வழங்கியது போன்ற முறைகேடுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளை நிலங்களுக்குள் புகுந்து…. அட்டகாசம் செய்யும் வனவிலங்குகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம், வாழை, நெல், தென்னை ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த பயிர்களை வனவிலங்குகள் நாசப்படுத்துகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் காட்டு யானைகள் பலவேசம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நுழைந்தது. பின்னர் காட்டி யானைகள் 10-க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்களை வேரோடு சாய்த்து பயிர்களை நாசப்படுத்தியது. மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்ற பலவேசம் காட்டு யானை அட்டகாசம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென வெடித்து சிதறிய வெடிகள்…. வலியில் அலறி துடித்த விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!!

நாட்டு வெடி வெடித்து விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விவசாயியான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சாகுபடி செய்துள்ள பயிர்களை நாசப்படுத்தும் கொக்கு, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளை விரட்டுவதற்காக ராமு நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ராமு வீட்டில் இருந்தபோது திடீரென நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதால் அவரது உடலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற முன்னாள் ராணுவ வீரர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!!

முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொக்கம்பட்டியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கிரண் குமார் சென்னையிலும், மகள் நியூசிலாந்திலும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுமித்ராவை சென்னையில் இருக்கும் மகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் எடுக்க சென்ற தம்பதி…. நூதன முறையில் ரூ.34 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் சாத்தூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் வெளியே நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் ராமலட்சுமி பணம் எடுத்து தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த நபர் ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொண்டு ஏ.டி.எம் மையத்திற்குள் சென்றுள்ளார். இதனையடுத்து உங்களுக்கு சரியாக வேலை செய்யவில்லை என கூறி மற்றொரு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தில்… விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்..!!!

கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் செவல்பட்டி கிராமத்தில் இருக்கின்ற மாந்தோப்பு விநாயகர் கோவிலை வருவாய் துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததை கண்டித்தும் அந்த கோவிலை மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும் கோவில்பட்டி உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினார்கள். இதன் பின்னர் அவர்கள் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கன்வாடி மையங்களில் முறையாக உணவு வழங்கப்படுகின்றதா…? தூத்துக்குடியில் அதிகாரி ஆய்வு..!!!

கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்….. நொடியில் உயிர் தப்பிய 5 பேர்…. அதிகாரிகளின் ஆய்வு…!!!

வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மநாயகன்பட்டி பாலகுட்டை லயன்ஸ் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாள்(60) மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு சுவர் அருகே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று இரவு முருகன் உட்பட 5 பேரும் வீட்டின் பின் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இந்த ஊராட்சி தலைவர் வேண்டாம்” காரணம் என்ன…? வார்டு உறுப்பினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!!

வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, சரண்யா, முனிராஜா, இளங்கோவன், பரந்தாமன், செல்வ மகாமுனி ஆகிய 6 பேரும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கிறார். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் வேலை பார்த்த தம்பதி…. 2 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்துஆவாரம்பட்டி பகுதியில் அந்தோணி வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ஓவியா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அருகே விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தம்பதி மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அந்த தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடுமையான பனிமூட்டம்…. விவசாய பணிகள் பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், இரவு நேரத்தில் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை 9 மணி வரை கடுமையான பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசனூர், தாளவாடி, கேர்மாளம், திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாக சென்றனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….! சோப்பு விற்பனை செய்வது போல நடித்து…. பெண்களை குறி வைக்கும் மர்ம கும்பல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி மற்றும் சித்தோடு பகுதியில் வசிக்கும் 2 பெண்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் பரிசு விழுந்ததாக கூறி தங்களிடம் சிலர் பண மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். அந்த புகாரின்படி வழக்குபதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கள்ளக்குறிச்சி சேலம் பகுதியை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பல் தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பது போல நடித்து பகல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரூ.2 கோடியில் வெள்ளிக் கதவுகள்… பிரபல கோவிலில் தீவிரமாக நடைபெறும் பணிகள்…!!!!!

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சோலைமலை முருகன் கோவிலில் ஏற்கனவே முன் மண்டபம், சஷ்டி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தங்க கொடிமரம் அமைத்தல், மூலவர் சன்னதியில் சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவித்தல் போன்ற பல்வேறு வளர்ச்சி திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து நேற்று கோவிலில் உள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் மூலவர் சன்னதியாக உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஆதிவேல் சன்னதி மற்றும் வித்தக விநாயகர் போன்ற சன்னதிகளின் பழமையான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மூச்சு திணறல் ஏற்பட்டு 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி நேருஜி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேவி நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த பிறகு நடந்தது என்ன…? மாணவி கூறிய அதிர்ச்சி தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் சிறுமி சைக்கிளில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்ற வருவது வழக்கம். கடந்த 16-ஆம் தேதி இண்டூர் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிறுமி மயங்கி விழுந்தார். பின்னர் மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை…. என்ன காரணம்…? கதறும் குடும்பத்தினர்…!!!

மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அருள்மணிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அருகே இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நிர்மல் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். நேற்று நீண்ட நேரமாகியும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. நொடியில் உயிர் தப்பிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் கவிபுரம் பகுதியில் கோகுல்நாத்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஸ்ரீ நிஷா(2) என்ற குழந்தையும் இருக்கின்றனர். நேற்று மாலை கோகுல்தாஸ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஏற்காடு மலை அடிவாரம் பகுதிக்கு சென்று காரில் இருந்தபடி சிறிது நேரம் சுற்றி பார்த்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு செல்வதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்க்கரை வியாபாரியிடம் “9.38 லட்ச ரூபாய் மோசடி”…. போலீஸ் விசாரணை….!!!

வியாபாரியிடம் 9.38 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் மோகன் குமார் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கிரண் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் சர்க்கரை வாங்க முடிவு செய்தார். இந்நிலையில் 25 டன் சர்க்கரை வாங்குவதற்காக மோகன் குமார் அந்த நிறுவனத்திற்கு 7,79,625 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கல்லூரி அருகே நின்று பேசிய நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வின்சென்ட் பகுதியில் இருக்கும் சேலம் அரசு கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி விக்னேஷ் கல்லூரி அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விக்னேஷை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு நடத்தி “55 லட்ச ரூபாய் மோசடி”…. 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

55 லட்ச ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்கம்பேட்டை கேட் மற்றும் நெருஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 பேர் 5 லட்சம், 10 லட்சம் என பல்வேறு ஏல சீட்டுகள் நடத்தியுள்ளனர். இவர்களை நம்பி பவானி ராணா நகர் பகுதியில் வசிக்கும் வேணி உட்பட 4 பேர் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதுவரை வேணி 11 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏல […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் மூலம் விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் கேரளா உட்பட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் சர்ச் ரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முகமது அசாருதீன்(23) என்பது தெரியவந்தது. அசாருதீன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மீண்டும்” பழைய நிலைக்கு திரும்பிய கடல்…. செத்து மிதந்த மீன் குஞ்சுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடல் அலைகள் நேற்று முன்தினம் பச்சை நிறத்தில் காணப்பட்டதோடு துர்நாற்றம் வீசியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடல் நீரின் நிறம் மாறியதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள் மீன் குஞ்சுகள் கடலில் செத்து மிதப்பதை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வங்கியின் சேவை குறைபாடு…. ரூ. 72 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவு….!!!

வங்கிக்கு 72 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோட்டை பகுதியில் கில்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கி அதிகாரி கேட்டுக்கொண்டபடி 25 ஆயிரம் ரூபாய் வீதம் 48 தவணைகளில் சேர்த்து முடிக்கும் டெபாசிட் திட்டத்தில் இணைந்தார். அதற்கு 6.85 சதவீதம் வட்டி கிடைக்கும் என வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கில்லஸ் சில தவணைகளை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனையடுத்து வங்கிக்கு சென்று […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வெறிபிடித்து சுற்றும் நாய்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. நகராட்சி ஊழியர்களின் முயற்சி….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் கடந்த சில நாட்களாக கழுத்தில் பெல்ட் அணிந்த ஒரு நாய் சுற்றி திரிகிறது. யாரோ ஒருவர் இந்த நாயை வீட்டில் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாகனத்தில் செல்பவர்களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் இந்த நாய் துரத்தி கடிக்கிறது. கடந்த சில நாட்களாக 10-க்கும் மேற்பட்டோரை இந்த நாய் கடித்து குதறியது. இதனால் காயமடைந்தவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை புலி….. அச்சத்தில் கூச்சலிட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டிற்குள் சிறுத்தை புலி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே நடுமலை ஸ்டேட் வடக்கு பிரிவில் தேயிலை தோட்ட தொழிலாளியான பாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை பாக்கியம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது பக்கத்து அறையில் பூனை ஒன்று அமர்ந்திருந்தது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிகள் நுழைந்த சிறுத்தை புலி பூனையை பார்த்து அதன் மீது பாய்ந்து பிடிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புரோக்கர் கூறியதை நம்பி…. 32 லட்ச ரூபாயை இழந்த பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

32 லட்ச ரூபாய் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் செங்குத்தா நகரில் வசிக்கும் மனிஷா என்பவர் அப்பகுதியில் மழலைகள் பள்ளியில் நடத்தி வருகிறார். இவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு எடுத்து மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் மாரியப்பன் என்பவரை அணுகினார். அப்போது காளபட்டியில் விற்பனைக்கு இருக்கும் ஒரு பிளாட்டை வாங்கி வீடு கட்டி தருவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மனிஷா பல்வேறு தவணைகளாக மாரியப்பனின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பாகன்…. மதம் பிடித்து தாக்கிய யானை…. பரபரப்பு சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி முகாம் அமைந்துள்ளது. இங்கு பாகன்களை வைத்து வனத்துறையினர் 22 யானைகளை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் பாகன் பிரசாந்த் என்பவர் 35 வயது மதிக்கத்தக்க சுயம்பு என்ற யானையை பராமரித்து வந்துள்ளார். நேற்று காலை பிரசாந்த் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் முகாமிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென மதம் பிடித்து யானை பிரசாந்தை தாக்கி பள்ளத்தில் தூக்கி வீசியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில்…. மகளால் தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேளங்கிப்பட்டு கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு புஷ்பரோகிணி(19) என்ற மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சுந்தரமூர்த்தி தனது மகளுக்கும், பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்தார். அதன்படி நாளை அவர்களுக்கு நடைபெற இருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து கொண்டிருந்தனர். நேற்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஹோட்டலில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையை முன்னிட்டு சரவணன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பெண்ணாடம் சென்று விட்டு சரவணன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இவர் கைகாட்டி அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ குஷி…! ஒரு வாரம் இலவசமாக பார்க்கலாம்…. மதுரை மக்களுக்கு வந்தது குட் நியூஸ்….!!!

உலக பாரம்பரிய வாரம் இன்று  நவம்பர் 19 முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இத்தினம் மக்களிடையே தங்களது சமூக கலாசார பாரம்பரியத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களை பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ளவும் தூண்டுகிறது. இந்நிலையில் சென்னை, மாமல்லபுரத்தில் உள்ள சின்னங்களை பார்வையிட  இன்று(நவம்பர் 19) சுற்றுலா பயணிகளுக்கு இலவசம் என புராதன தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதேபோல மதுரையின் பிரசித்தி பெற்ற […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (19.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி…. வனத்துறையினருக்கு வந்த தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததால் வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் வெள்ளார் சின்னம்மம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்து இருப்பதாக டேனிஷ் பேட்டை வனச்சரகர் தங்கராஜுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதன் பேரில் வனத்துறையினர் கோவிந்தராஜ் வீட்டை சோதனை இட்டார்கள். அப்போது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்துள்ளது. இதனை வனத்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கருப்பு நிற உருவம் என்னை குதிக்கச் சொன்னது”… மாடியில் இருந்து குதித்த மாணவி…. படுகாயங்களுடன் சிகிச்சை…!!!

பிளஸ்-1 படிக்கும் மாணவி பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்1 படித்து வருகின்றார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் தற்போது வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்கின்றார். இந்த நிலையில் சென்ற பதினைந்தாம் தேதி வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற மாணவி காலை 11:30 மணியளவில் பள்ளியின் மாடிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் “புத்தகக் கண்காட்சி”… நாளை ஆரம்பம்… அதிரடி உத்தரவுகளை வெளியிட்ட ஆட்சியர்…!!!

சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(நாளை) புத்தக கண்காட்சி ஆரம்பமாகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் மாநகராட்சி திடலில் நாளை முதல் வருகின்ற 30ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வாசிப்பு பழகத்தை அதிகரிப்பதற்காக தமிழக அரசு சார்பாக புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Local Holiday: டிசம்பர் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….? அதிரடி அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் சத்தம் போட்ட ஆடுகள்…. மர்ம விலங்கின் அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் இறந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல சக்திவேல் நேற்று மாலை ஆடுகளை வெளிப்புறத்தில் கட்டியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் கடித்து குதறிய நிலையில் 16 ஆடுகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரை தேடி வந்த போது…. பரிதாபமாக இறந்த காட்டெருமை…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் சிங்கம்பட்டு காட்டுப்பகுதியில் இருந்து இரை தேடி காட்டெருமை வெளியே வந்தது. இந்நிலையில் மூலக்காடு கிராமத்தில் வசிக்கும் குமரேசன் என்பவரது விவசாய கிணற்றில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. பின்னர் தண்ணீரில் மூழ்கி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த குமரேசன் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டெருமையின் உடலை கயிறு கட்டி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கவுன்சிலர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கவுன்சிலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னங்காரணி ஊராட்சியில் அருண் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற 6- வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். மேலும் அருண் பாண்டி தனியார் நிறுவனத்தில் ஊழியராகவும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அருண் பாண்டி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அருண்பாண்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீசாரின் அதிரடி சோதனை….. வசமாக சிக்கிய கல்லூரி மாணவர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக கணேஷ் அவென்யூவில் நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ்(21) மற்றும் சையது நசீர்(22) என்பது தெரியவந்தது. இதில் பிரகாஷ்ராஜ் தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பும், சையது தனியார் இன்ஜினியரிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. என்ன காரணம்….? கதறும் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தெருவில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜனனி(12) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த உமாபதி தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலத்த மழையால் இடிந்து விழுந்த வீடு…. உயிர் தப்பிய பாட்டி, பேத்தி…. அதிகாரிகளின் ஆய்வு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் மாற்றுத்திறனாளியான நாகம்மாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நாகம்மாளின் கணவர் இறந்து விட்டதால் நாகம்மாள் தனது பேத்தியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் நாகம்மாளின் வீட்டு சமையலறை சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது. இதனால் பாட்டியும், பேத்தியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் இடிந்து விழுந்த வீட்டை பார்வையிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு…. வைரலாகும் புகைப்படம்…. வனத்துறையினரின் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ராஜேந்திரன் நகரில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இவரது வீட்டிற்குள் வெள்ளை நிறப் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து ஜெய்ப்பால் அதிர்ச்சியடைந்தார். அதன் அருகே சென்ற போது பாம்பு படம் எடுத்து சீறியதால் ராஜேந்திரன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் ரவிக்குமார் என்பவர் விரைந்து வந்து துணிச்சலாக பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார். இந்த பாம்பை அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்தனர். அது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் அளித்த புகார்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள தீபாலகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் உடுமலை ரோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதற்காக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி ராகுல் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில் இருந்த செல்போன் மடிக்கணினிகள், சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதை அறிந்து ராகுலும் அவரது நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.93 லட்சம் மோசடி…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது கணவர் மூலம் கோவையைச் சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2020-ஆம் ஆண்டு ஒருவர் எனக்கு அறிமுகமானார். அவர் அமைச்சர் ஒருவரை நன்கு தெரியும் எனவும், கட்சியில் பொறுப்பாளராக இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து வந்த மாணவ-மாணவிகள்…. கூட்டத்திற்குள் புகுந்த லாரி…. பரபரப்பு சம்பவம்…!!

லாரி மோதிய விபத்தில் 2 மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக லாரி ஓட்டுநர் வாகனத்தை வலது புறமாக திருப்பியுள்ளார். இதில் பள்ளிக்கூடம் முடிந்து நடந்து வந்து கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்திற்குள் லாரி புகுந்ததால் 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் லாரி சாலையோரம் இருந்த தடுப்பு கல்லை […]

Categories

Tech |