Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்… மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிவந்திபுரம் ஊராட்சியில்… மக்களை தேடி மருத்துவ முகாம்..!!!

சிவந்திபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் யூனியன் சிவந்திபுரம் ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம் மற்றும் எக்ஸ்ரே வேன் மூலமாக எக்ஸரே எடுக்கப்பட்டது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவர் பிரவீன் தலைமை தாங்க பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ஜெகன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் ரமேஷ் ராஜா, சதீஷ்குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்துரு ஜெயக்குமார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் நீலகிரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! இது ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா?… கூட்டத்தை கண்டு வியந்த அண்ணாமலை..!!

நிறுவனத்திற்கு சொந்தமான 5,315 ஏக்கர் நிலம் மற்றும்  நிறுவனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அதை மத்திய அரசு ஏற்று நடத்த தயார் நிலையில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கேன்டீன் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை களையக்கோரி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை இது கண்டன ஆர்ப்பாட்டமா? இல்லை மாநாடா? […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாய் கடன்…. காசோலை கொடுத்து மோசடி செய்த நபர்…. நீதிமன்றம் அதிரடி…!!!

காசோலை கொடுத்து மோசடி செய்த நபருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் விவசாயியான வசந்தம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெருந்துறை ஈரோடு தங்கம் நகரில் வசிக்கும் பரணிதரன் என்பவர் வசந்தத்திடம் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடனை திருப்பிக் கொடுப்பதற்காக பரணிதரன் 5 லட்ச ரூபாய் காசோலையை வழங்கியுள்ளார். ஆனால் காசோலையை வங்கியில் செலுத்திய போது வங்கி கணக்கில் பணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!!

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிவதோடு, வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் கடுமையான பனிமூட்டத்துடன் குளிர் நிலவுகிறது. இதனால் காலை நேரங்களில் வெளியே வரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதனையடுத்து வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை இயக்குகின்றனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு தாங்க…. பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதலர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜஜினா (23) என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஜஜினாவும், அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பலியான இளம்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா மணி என்ற மனைவி இருந்துள்ளார் இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் லதா தனது மொபட்டில் வீட்டிலிருந்து அந்தியூர் செல்ல புறப்பட்டுள்ளார். இவர் பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி லதாவின் மொபட் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உழவு பணியின் போது அருகே இருந்த சிறுமி … தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!!

தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம்  அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3)  அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை  உழது கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக  ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

3-வதும் பெண் குழந்தையா….? கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்…!!!

கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவதாக கர்ப்பமான அமுதா வயிற்றில் இருப்பது ஆணா? பெண்ணா? என தெரிந்து கொள்ள விரும்பினார். இது தொடர்பாக பரிசோதனை செய்ய கடந்த 17-ஆம் தேதி அமுதா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அசகளத்தூரில் இருக்கும் தனியார் மருந்தகத்திற்கு சென்றுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அரசு பள்ளியில் தொழிற்பயிற்சி முகாம்… கலந்து கொண்ட பிளஸ் 2 மாணவர்கள்…!!!!!

எச்.சி.எல் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவை இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வேலையில்  அமர்த்தப்பட இருக்கின்றனர்.  வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் பள்ளியில் இதற்கான தேர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

20-வது ரூபாய்க்கு சிக்கன் பக்கோடா சாப்பிட்டு… வெறி பிடித்த இளைஞர்கள்…!!!

ஆரணி அருகே உணவு மாதிரி எடுக்கச் சென்ற அலுவலர்கள் மீது சிக்கன் பக்கோடா சாப்பிட்டவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி சாலையில் இருக்கும் ஹவுசிங் போர்டு அருகே வெல்கம் ஷாப் என்ற சிக்கன் கடை செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 100 கிராம் சிக்கன் பக்கோடா ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகின்றது இதனால் இங்கு மாலை நேரத்தில் கூட்டம் அலைமோதிய வண்ணம் இருக்கும். இந்த நிலையில் நேற்று மாலை அந்த கடைக்குச் சென்ற உணவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியாக கீழே விழுந்த குழந்தை…. பதறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஓடும் பேருந்தில் இருந்து 4 வயது குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சென்று கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை சாலையில் விழுந்தது. அப்போது குழந்தையின் சத்தம் கேட்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்து நிறுத்தினார். இதனையடுத்து பேருந்தில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக காரை ஓட்டி வந்த சிறுவன்…? தள்ளுவண்டி கடைக்குள் புகுந்து 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியாற்று முகம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் தங்கி இருந்து தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக வந்த கார் தள்ளுவண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ், கூழ் குடித்து கொண்டிருந்த ரெனால்ட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காது கிழிந்து ரத்தம் வடிந்த நிலையில்…. கம்மலை பறித்து சென்ற மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!!

தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூச்சிவிளாகம் பகுதியில் தங்க கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய நிர்மலா என்ற மனைவி உள்ளார். இவர் கீழத்தாரவிளை சாலையோரம் இருக்கும் பொருட்களை தனது கால்நடைகளுக்காக பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த பகுதியில் மெக்கானிக் கடை இருக்கிறதா? என நிர்மலாவிடம் கேட்டுள்ளனர். அவர் பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி…. பெண் இன்ஸ்பெக்டரின் மகன் இறப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பட்டாளம் போலீஸ் குடியிருப்பில் சுகுணா என்பவர் வசித்து வருகிறார். இவர் அசோக் நகரில் இருக்கும் போலீஸ் பயிற்சி முகாமில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ராஜ்குமார் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நிக்கிலன்(14), நவீன்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று மாலை ராஜ்குமார் நிக்கிலனிடம் சாப்பிட ஏதாவது வாங்கி வர வேண்டுமா? என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யானையால் 8 கி.மீ பின்னோக்கி நகர்த்தப்பட்ட பேருந்து…. வால்பாறை-சாலக்குடி சாலையில் போக்குவரத்திற்கு தடை…. கேரள வனத்துறையினர் அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக சாலை செல்கிறது. கடந்த சில நாட்களாக இந்த சாலையில் உலா வரும் ஒற்றை காட்டு யானை வாகனங்களை துரத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரளா அரசு பேருந்தை யானை துரத்தியதால் ஓட்டுநர் சுமார் 8 கி.மீ தூரம் பின்னோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

”இது எங்களுக்கான டைம்”.. பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து மோதல்… தஞ்சையில் பரபரப்பு சண்டை…!

எப்போதுமே மக்கள் கூட்டத்தோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து நிலையங்களில் பரபரப்பான சம்பவங்களும் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்றது. மாணவர்களுக்குள் சண்டை, மாணவிகளுக்குள் சண்டை, நடத்துனர்களுக்குள் சண்டை, பயணிக்குள் சண்டை, குடி போதையில் சண்டை என,  இந்த மாதிரி சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது தனியார் பேருந்துகளுக்குள் போட்டி காரணமாக ஏற்பட்ட சண்டை குறித்தான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் புறப்படும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் உருவாகும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் விதமாக சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல்…. 5 மணி நேரம் திணறடித்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமசாமி முதலியார் வீதியில் சசிகுமார் என்பவரது வீட்டில் முதல் தளத்தில் செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஏறியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். அப்போது தனது மனைவி கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். அவரை மீட்டு தரவில்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா நாட்களில் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மின்இழுவை ரயில், ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கோவிலில் இருக்கும் பொது, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்…. விவசாயி பலி; 8 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

ஜீப் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அசன்கொடை கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான அபிராமன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் பேஷன் புரூட் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அபிராமன் ஜீப்பில் ஏற்றி தாண்டிக்குடியில் இருக்கும் கமிஷன் மண்டி கடைக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை…? வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் சிலர் சுற்றுலா பயணிகளுக்கு காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கலையரங்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, அகஸ்டின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாட்டி வீட்டிற்கு சென்ற மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் ராஜசேகர்- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதியினரின் மகன் பாரதி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாரதி பாச்சாமல்லனூரில் இருக்கும் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நண்பர் ஒருவருடன் பாரதி கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீச்சல் தெரியாத பாரதி முதலில் கிணற்றில் இறங்கியதும் தண்ணீரில் மூழ்கினார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த செல்போன்…. நேர்மையாக ஒப்படைத்த மாணவர்கள்… பாராட்டிய போலீசார்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில்வே கேட்பகுதியில் வசிக்கும் பத்ரிநாத் தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பத்ரிநாத் தனது  நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையில் ஒரு செல்போன் கிடப்பதை சிறுவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் சாலையில் கிடந்த செல்போனை  எடுத்து வடமதுரை காவல் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமனிடம் ஒப்படைத்தனர். செல்போனை நேர்மையாக ஒப்படைத்த மாணவர்களை போலீசார் பாராட்டியுள்ளனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி செல்போனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு-தனியார் பேருந்துகள் மோதல்…. 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து அரசு பேருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே போல் பழனியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 50 பேர் தனியார் ஆம்னி பேருந்தில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல்-பழனி சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரை அரசு பேருந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. உழவு பணியின் போது பலியான ஓட்டுநர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் டிராக்டர் ஓட்டுனரான சோனைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்ததால் இடிபாடுகளில் சிக்கி சோனைமுத்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சோனை முத்துவை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்…. பெண் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டியில் மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மணியை அவரது குடும்பத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் மணியை தேனி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் நேற்று முன்தினம் மணி தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும் மணியின் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலியான சான்றிதழ் கொடுத்து…. வழக்கறிஞர் என்ற பெயரில் பலரிடம் மோசடி….. பரபரப்பு சம்பவம்…!!!

போலியான சான்றிதழ் கொடுத்து மோசடி செய்த வழக்கறிஞராக வேலை பார்த்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜி.அரியூர் கிராமத்தில் அரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரன்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருக்கோவிலூர் வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது நடத்தையில் சக வழக்கறிஞர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் ராஜ்குமார் வீரனிடம் படித்து முடித்ததற்கான சான்றிதழை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் வீரன் ஏதாவது […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சொத்து வரி வசூலிப்பு… பெண் அதிகாரிக்கு மிரட்டல்…. திண்டிவனத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!!

சொத்து வரி வசூலித்த விவகாரத்தில் பெண் அதிகாரியை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருக்கும் மயிலம் சாலையில் ஒரு திருமண மண்டபத்திற்கான சொத்துவரி 1,39,832 ரூபாய் நகராட்சிக்கு செலுத்தாமல் இருக்கின்றது. இந்த வரியை வசூலிப்பதற்காக நகராட்சி மேலாளர் சந்திரா தலைமையிலான வருவாய் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மண்டபத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களை பணி செய்யாமல் தடுத்தார்கள். இந்த நிலையில் நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில்… கூடுதல் பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கப்படுமா…? பயணிகள் எதிர்பார்ப்பு…!!!!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையம் கூடுதலாக அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். விழுப்புரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவும் பயணிகள் கூட்டம் அலைமோதியும் காணப்படும். இங்கு பண்டிகை நேரத்தில் மேலும் பயணிகள் கூட்டம் அலைமோதும். 24 மணி நேரமும் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருக்கின்ற நிலையில் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் பயண சீட்டு முன்பதிவு செய்ய நான்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்திய கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவி… நேபாளம் செல்ல எம்.எல்.ஏ 25,000 நிதி உதவி…!!!

இந்திய கபடி போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குடியாத்தம் மாணவிக்கு நேபாளம் செல்வதற்கு எம்எல்ஏ ரூபாய் 25000 நிதி உதவி வழங்கியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் மோடிக்குப்பத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் சந்தியா. இவர் அரசினர் திருமகள் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகின்றார். இவர் சிறு வயதில் இருந்தே கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட நிலையில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் கோவாவில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் இலவச பயிற்சி…. இன்று மாலை 5 மணிக்குள் அப்ளை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நவம்பர் 22 ஆம் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. முதல்நிலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்ப விழுமோ.? எப்ப விழுமோ.?” ஆபத்தான நிலையில் தபால் நிலையம்… மக்கள் கோரிக்கை..!!!

தபால் ஊழியரை நியமித்து புதிய கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தாலுகாவிற்குட்பபட்ட பெரியாயிபாளையத்தில் இருக்கும் கிளை தபால் நிலையம் ஓட்டு கட்டிடத்தில் இடிந்து விழக்கூடிய நிலையில் செயல்பட்டு வருகின்றது. இந்த தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, ஆர்.டி.பகுதி கால சேமிப்பு, செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ் தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இருக்கின்றது. பல பயன்பாடுகளுக்காக மக்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி… சம்பவ இடத்தில் நேர்ந்த சோகம்..!!!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் ஆழ்வார்கற்குளம் வடக்கு தெருவை சேர்ந்த தொழிலாளி சிவபெருமாள் என்பவர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இருக்கின்றார்கள். ஆனால் அவர் இல்லை. இதையடுத்து இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல இடங்களில் தேடியிருக்கின்றார்கள். பின்னர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம்… கோரிக்கை முன்வைப்பு…!!!

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 34 ஆவது வார்டு அசோக் நகர் 2வது தெருவில் புதியதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, உள்விளையாட்டு அரங்கில் மரப்பலகையிலான தரைத்தளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் விரைவில் 88 இடங்களில்…. எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்போர் ஹேப்பி…. மாநகராட்சி உத்தரவு…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு பல மாநிலங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் விரைவில் 88 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்”… தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேச்சு..!!!

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி கலை கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சார்பாக பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியுள்ளதாவது, தமிழக அரசு இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை சதி செய்து மாற்றிவிடீர்கள்”..? கண்ணில் பட்டவர்களை குத்திய தனியார் ஊழியர்… எழும்பூரில் பயங்கரம்…!!!!

சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

பெண் தனது 2 மகள்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் நேற்று தனது இரண்டு மகளுடன் சென்று திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து போலீசாரிடம் அந்த பெண் கூறியதாவது, எனது பெயர் சுபலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும், தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எங்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு விபத்தில் எனது கணவர் இறந்து விட்டதால் நாமக்கல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. என்ன காரணம்…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனையடுத்து சிறுமிக்கு உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்த உறவினர் சிறுமி மயங்கி கிடந்ததை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் விளையாடிய 3 வயது குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்….. கதறும் குடும்பத்தினர்….!!

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் ராஜ்குமார்- சங்கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரிஷ்மிதா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று சங்கீதா தனது மகள், மாமனார், மாமியாருடன் அப்பகுதியில் இருக்கும் வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையிடம் ஒரு செல்போனை கொடுத்து தனியாக உட்கார வைத்துவிட்டு 3 பேரும் வயலில் இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது செல்போனில் விளையாடி கொண்டே நடந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிறுமி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் இண்டூர் பேருந்து நிறுத்தம் தாண்டி சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிரமப்படும் கிராம மக்கள்…. தனியார் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டி பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சரியாக நின்று செல்லாததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று தங்கம்மாபட்டியில் நிற்காமல் சென்றதால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2026 ஆம் ஆண்டுக்குள் சென்னை விமான நிலையம்…. மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போனை கட் செய்த கணவர்…. வேதனையில் புதுப்பெண் தற்கொலை…. திருமணமாகி 9 மாதத்தில் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வரும் ஜெகதீஸ், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகதீஸின் அம்மா, தங்கை ஆகிய இருவரும் ஜெபசீலிக்கு தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து, கணவரிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கட் செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த ஜெபசீலி […]

Categories
திருப்பூர்

அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!

மடத்துக்குளம் அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தை அடுத்திருக்கும் சோழமாதேவி வாய்க்காலில் நேற்று முன்தினம் அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த பெண்ணிற்கு சுமார் 60 வயது இருக்கும் என கருதப்படுகின்றது. உடல் முழுவதும் அழுகிய நிலையில் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மது போதையில் ஆட்டம் போட்ட நாய்… மர்ம போதை ஆசாமி செய்த செயலால் பரபரப்பு…!!!

மர்ம ஆசாமி ஒருவர் நாய்க்கு மது கொடுத்ததால் மயங்கி விழுந்தது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சி மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் பிரபல திருமண மண்டபங்கள் இருக்கின்றது. இந்த மண்டபத்தின் அருகே செடி கொடிகள் நிறைந்த பகுதியில் மர்ம ஆசாமி ஒருவர் மது போதை அதிகமான நிலையில் அங்கே சுற்றி திரிந்த நாய் ஒன்றியத்துக்கு பிளாஸ்டிக் டம்பளரில் மதுபானத்தை ஊற்றி கொடுத்து இருக்கின்றான். அதை குடித்த நாய் அங்கிருந்து நடக்க முயற்சித்தது. ஆனால் நடக்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான மெல்லிசைப் போட்டி… பெரியகுளம் மாணவி வெற்றி… ஆசிரியர்கள் பாராட்டு..!!

மாநில அளவிலான மெல்லிசைப் போட்டியில் பெரிய குளம் மாணவி வெற்றி பெற்றுள்ளார். தேனி மாவட்டத்தில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா நடைபெற்றது. இதில் மெல்லிசை சம்பந்தமான பல்வேறு போட்டிகள் நடைபெற்றதில் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றார்கள். அதில் வயலின் இசை பிரிவில் பெரியகுளம் மேரி மாதா மெட்ரிக் பள்ளி பிளஸ் 1 மாணவி எஸ்.ரோநி மணித்ரா முதலிடத்தை பிடித்து இருக்கின்றார். இதையடுத்து நாமக்கலில் நடைபெற்ற மாநில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள்… கொடியசைத்து வழியுனுப்பி வைத்தல்… பொன்மலை ரயில்வே பணிமனை சாதனை..!!!

புனரமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுதுபார்க்கும் பணிமனைகளில் முதன்மையானதாக திகழ்கின்றது. சென்னை 2020-ஆம் வருடம் இறுதியில் எல்.எச்.பி அவர்களின் விரிவான மறுசீரமைப்பு பணி பொன்மாலை பணிமனைக்கு வழங்கப்பட்டதில் முதல் இரண்டு எல்.எச்.பி பவர் கார்கள் புனரமைக்கப்பட்டு 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து டீசல் பணிமனையானது பழுது பார்க்கும் பணியில் அனுபவம் தேர்ச்சி பெற்று நூறாவது எல்.எச்.பி பவர் காரை புனரமைத்ததன் […]

Categories

Tech |