Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடுமையான பனிப்பொழிவு….. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!!

பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நேற்று அதிகாலை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் காலை 8:30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“10 நாட்கள் கால அவகாசம்”…. பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு…. அதிகாரியின் எச்சரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பள்ளி வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமிகள்…. செல்போன் சிக்னலால் தெரிந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

செங்கல் சூளையில் வேலை பார்த்த 3 சிறுமிகள் உட்பட 11 பேரை அதிகாரிகள் மீட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனைவியின் உடலை எரித்த கணவர்…. போலீசுக்கு கிடைத்த தகவல்…. பெண் உள்பட 5 பேர் கைது….!!

போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மனைவியின் உடலை எரித்த கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கட்டாரபட்டியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்பம்மாள் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த முனியாண்டி தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஆனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அதே பகுதியில் வசிக்கும் சேர்ந்த சிலருடன் […]

Categories
மாவட்ட செய்திகள்

சாலையில் திடீர் விரிசல்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் திடீரென 2 இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை இயக்கமுடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமபடுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் பனங்காட்டங்குடியில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சுமார் 14 கோடி ரூபாய் செலவில் தார்சாலை அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் அரசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசடிபாலம் அருகே திடீரென 1௦௦ மீட்டர் அளவிற்கு சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாடி கிராமத்திலும் இதேபோல் சாலை விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருநெல்வேலியில் இருக்கும் பூர்வீக வீட்டிற்கு சென்ற கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் போட்டோஸ்…!!!

பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் மீது பொய் குற்றசாட்டு கூறினால் – கடும் நடவடிக்கை எடுங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு …!!

போலீஸாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. சட்டத்தின்படியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்பதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெட்கக்கேடு.. தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு…!!!

தமிழ்நாட்டில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர் அதிகரித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்திருப்பதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணியாற்றவும் மாடுகள் ஆடுகள் மேய்க்கவும் விவசாயத்துக்காகவும் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை அதிகரித்து பல்வேறு வழக்குகள் பதிவாகி வருவதாகவும் இந்த பகுதியில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையம் அமைத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!!

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை ஒட்டி போலீஸ் கூண்டு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் போலீஸ் கூண்டில் ஏறி நின்று தன்னை சிலர் தாக்கியதாக கூறி சத்தம் போட்டு ரகளை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கி வருமாறு கூறியதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சத்தம் போட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் பரபரப்பு…. பேராசிரியர் உள்பட 2 பேர் காயம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் பாலதேவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பாலதேவகுரு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“அதிரடி” சோதனை நடத்திய அதிகாரிகள்…. 5 கடைகளுக்கு அபராதம்…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு ஆண்கள் பள்ளி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 5 பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த “3 பெண் குழந்தைகள்”…. அரசுக்கு கோரிக்கை விடுத்த இளம்பெண்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ஆம் தேதி லட்சுமிக்கு சுக பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என டாக்டர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் கிடந்த பை…. நேர்மையாக செயல்பட்ட விவசாயிகள்…. பாராட்டிய போலீசார்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுநெமிலி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு விவசாயியான குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சென்ற போது சாலையில் பை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த 2 பேரும் மோட்டார் சைக்கிள் ஓரமாக நிறுத்திவிட்டு பையை எடுத்தனர். இதனையடுத்து பையை திறந்து பார்த்தபோது அதில் சில ஆவணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண் உயிரிழந்த விவகாரம்…. மருந்தக உரிமையாளர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் மருந்தாக உரிமையாளர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது . கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அமுதா அசகளத்தூரில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்து மருந்தாக உரிமையாளர் வடிவேல் என்பவர் அமுதாவை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

WOW…!! கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு…. 80 கிலோவில் தயாராகும் ஸ்பெஷல் கேக்….!!

கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் தயாரிப்பதை போலவே 80 கிலோ எடையுடைய பிளம் கேக் தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக முந்திரி வகைகள், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, கிறிஸ்மஸ் பழம் உள்ளிட்ட உலர் ரக 15 வகை பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவையை தயாரித்தனர். இந்நிலையில் 13 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய தொண்டு நிறுவனத்தினர்….. விசாரணைக்கு பயந்து விஷம் குடித்த “கொத்தனார்”…. பரபரப்பு சம்பவம்…!!!

விசாரணைக்கு பயந்து கொத்தனார் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கொத்தனாரான செந்தில்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த செலவில் வீடு கட்டி தருவதாக தனியார் தொண்டு நிறுவனத்தினர் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என அறிவிக்கப்பட்டதால் செந்தில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் பொதுமக்களை வீடு கட்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் அறை எடுத்து தங்கி…. கேரள தம்பதி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!!

கேரள தம்பதி பழனி தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி படிவாரத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு கேரள மாநிலம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்ரகு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தற்கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள்…. என்ன காரணம்…? மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!!

மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்று 1 1/3 ஆண்டுகள் கடந்த பிறகும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அஞ்சலைக்கும், பாப்பாத்திக்கும் ஓய்வூதியம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தலைக்கவசம் இல்லனா பெட்ரோல் இல்லைங்கோ”… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சென்ற ஜனவரி 22 முதல் செப்டம்பர் 2022 வரை 262 இரு சக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதில் 126 பேர் இறந்துள்ளார்கள். தற்போது தலைக்கவசம் அணியாமல் வந்தால் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் பெட்ரோல் பங்க்-ல் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம்: உயர்நீதிமன்ற கிளை

இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி,  செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்டவிரோதம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி, நெல்லை, கோவை, குமரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து தனியார் ரிசார்டுகளில் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது உயர்நீதிமன்ற கிளை. இயற்கையான அருவிகளின் நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவது சட்ட விரோதம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆய்வு செய்வதற்காக குழு அமைத்திருக்கிறார்கள். இந்த குழுவில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (23.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி… போலீசார் வழக்கு பதிவு..!!!

தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பார்த்திபனூர் பரளை பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதாகவும் திருமணத்தின்போது தனக்கு பெற்றோர்கள் 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சத்தை கொடுத்ததை அவர் என்னிடம் தர மறுக்கின்றார். ஆகையால் அவரிடம் இருந்து எனது நகையையும் பணத்தையும் மீட்டுத் தருமாறு ஆட்சியரிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு… காப்பீடு திட்டம் தொடக்கம்…!!!

இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் இருக்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உலக மீனவர் தினத்தையொட்டி நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் பங்கேற்று தொடங்கி வைத்தார். இதன்பின் நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் காப்பீட்டின் நிறுவனம் மற்றும் மீன்வள […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொதுகழிப்பிடம் தூய்மையாக இல்லையா..? புகார் கொடுக்க புதிய வசதி… மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

பொதுக்கழிப்பிடம் தூய்மையாக இல்லாமல் இருந்தால் புகார் கொடுக்க புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் பிரத்தியேக செல்போன் ஆப் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதில் சுகாதாரம் சார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினரின் பணிகள் இணையம் வாயிலாக பதவேற்றப்படுகின்றது. இந்த நிலையில் பொதுக்கழிப்பிடத்தில் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் க்யூ ஆர் கோடு உதவியுடன் செல்போன் மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் தூய்மை இந்தியா திட்ட இணையதள செயலியுடன் இணைக்கப்பட்ட கியூ ஆர் கோடு பொதுக்கழிப்பிடங்களின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் நாளை (நவம்-24) இங்கெல்லாம் பவர் கட்… உங்க ஊரு இருக்கான்னு பார்த்துக்கோங்க…!!!

நாளை வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம், உடையாபட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதுபோல உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் அவசரகால மின் பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களில் கீழ் குறிப்பிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

BREAKING: கனமழை எதிரொலி…. இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கணமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நகரும் என்பதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற கோவில் பூசாரிகளுக்கு… தபால் நிலையம் மூலம் ஆயுள் சான்று.. வேண்டுகோள்..!!!

அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்குவதைப் போல கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் மூலமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தபால் நிலையம் மூலமாக ஆயுள் சான்று கோவில் பூசாரிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கின்றது. இது பற்றி பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டிருக்கின்றது. தபால் நிலைய ஊழியர்கள் வீடு தேடிச்சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நவ30-ம் தேதியே கடைசி.. வரியை செலுத்த வேண்டும்… இல்லையென்றால் சீல்‌.. நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை..!!!

30-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் வணிக கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சி நிர்வாகம் முப்பதாம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் நகராட்சியில் சென்ற மூன்று வருடங்களுக்கு மேலாக குடிநீர் கட்டணம் செலுத்தாத 33 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்பு சென்ற ஒரு வாரத்தில் துண்டிப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இதுபோல சொத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடம்… மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை… பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு..!!!

இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகே இருக்கும் தினையத்தூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் 150 குழந்தைகள் படித்து வருகின்றார்கள். இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. சில பகுதிகளில் இடிந்து விழும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் இளைஞர்களே ரெடியா இருங்க…. நவம்பர் 26-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக தமிழக அரசு தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் தற்போது சேலம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நிலையில் இந்த முகாமில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை(24.11.22) முதல் ரேஷன் கடைகளில்…. ரூ.1000 உதவித்தொகை இங்கு மட்டும்…. தமிழக அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை கடுமையாக பெய்து வந்தது இதனால் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எனவே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, வரும் நவம்பர் 24 முதல் ரேஷன் கடைகளில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தம்… மணமகன் காவல் நிலையத்தில் புகார்… காரணம் என்ன..? போலீசார் விசாரணை..!!!

கடைசி நேரத்தில் திருமணம் திடீரென்று நிறுத்தப்பட்டதால் மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரவரக்கோடு மறுத்தாக்கவிளை பகுதியைச் சேர்ந்த 32 வயது எலக்ட்ரீசியனுக்கும் குளப்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் சென்ற மாதம் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் மூன்று மணிக்கு தேமானுர் பகுதியில் இருக்கும் ஒரு ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்திருந்தார்கள். திருமணம் நேரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி… ஆட்சியர் அலுவலகத்தில் தொடக்கம்..!!!

பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சார்பாக டிஜிட்டல் பரிவர்த்தனையின் பாதுகாப்பான பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட இருக்கின்றது. இதில் பண பரிவர்த்தனையின் போது செய்யப்படும் மோசடி, ஆன்லைன் செய்திகளை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு”… மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கல்..!!!

திருக்கோவிலூர் அருகே சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் ஜி.அரியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஒன்றிய குழு உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமை தாங்கி பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன்பின் சிறப்புரை ஆற்றினார். இந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை, கல்வி மேலாண்மை குழு தலைவர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாண்குளம் அய்யா கோவில் தெருவில் முத்து ஜவகர்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து அதே பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கடத்திச் சென்றார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பத்தமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற இளம்பெண்…. வாலிபர்கள் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!!

இளம் பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் சென்ட்ரல் பேங்க் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா(20) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நர்மதா கோவைக்கு சென்று விட்டு கண்ணமநாயக்கனூரில் டவுன் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நர்மதா வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்…. காயமடைந்த 4 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் இருந்து அரசு பேருந்து சேக்கல் முடி எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி மற்றொரு அரசு பேருந்து வந்தது. இந்த பேருந்துகள் வில்லோணி எஸ்டேட் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 கோடி ரூபாய் மோசடி…. சொகுசாக வாழ்ந்த நபர்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

2 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிங்காநல்லூரில் வசிக்கும் பிரான்சிஸ் சேவியர் செல்வராஜ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் செல்வராஜ் தான் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பொது மேலாளராக வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார். இதனால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கார் ஓட்ட அனுமதி அளிக்குமாறு கதிரவன் கேட்டதற்கு 2 1/3 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த கடமான்…. தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்குபதிவு…. வனத்துறையினரின் தகவல்…!!!

மின்வேலியில் சிக்கி கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரன்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக சோலார் மூலம் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கடமான் மின்வேலிஅருகே சென்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் கடைமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த நாய் குட்டிகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கிணற்றுகள் விழுந்த நாய்க்குட்டிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி காந்திநகர் புது காலணியில் ஒரு கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டு நாய்க்குட்டிகள் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி 2 நாய்க்குட்டிகளையும் பத்திரமாக மீட்டனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முறையான சிகிச்சை அளிக்காததால்…. காலை இழந்த பேருந்து ஓட்டுனர்…. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்….!!

முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குப்பை அள்ளுவது போல நடித்த வாலிபர்…. 19½ பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை…. போலீஸ் அதிரடி….!!

குப்பை அள்ளுவது போல நடித்து 19½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் மர்மநபர் ஒருவர் பூட்டியிருந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே இருந்த 19½ பவுன் நகை மற்றும் பணத்தை கடந்த 9-ஆம் தேதி திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிதாக வாங்கிய வீட்டில் இறந்து கிடந்த “மத்திய அரசு அதிகாரி”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரி பேட்டை பகுதியில் பால்பாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சி.வி.ஆர்.டி.இ- யில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பால்பாண்டி ஆவடி ஜே.பி எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு பழுது பார்க்கும் பணியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்ற பால்பாண்டி திரும்பி வரவில்லை. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பாபா நகரில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுதா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் சுதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோபத்தில் கணேசன் தனது மனைவியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க மாணவர்கள்….. விபத்தில் சிக்கி வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

மோட்டார் சைக்கிள் மேம்பால தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஆலன் ஜெர்மான்ஸ், வேலூரைச் சேர்ந்த தருண்குமார், விருதாச்சலத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் ஆகியோர் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் முகப்பேரில் வாடகை வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் சூரிய உதயத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ.13 லட்சம் மோசடி…. போலியான ஆவணம் தயாரித்த மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர்….. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் கண்ணிலால் நகல் 2-வது தெருவில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை நண்பர்கள் மாற்றுதிறனாளி நல சங்கத்தில் தலைவராக இருக்கிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஆனந்தகுமார் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் சங்கீதா உட்பட 150 மாற்றுத்திறனாளிகளிடம் அரசு ஒதுக்கீடு செய்யும் வீடுகளை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஒவ்வொருவரும் தலா ரூ.20,000 என மொத்தம் 12 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயை ஆனந்தகுமாரிடம் கொடுத்ததாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான  சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. ரூ.41 லட்சம் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்…. அப்பா-மகன் கைது…. போலீசார் அதிரடி….!!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் தங்கச்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் வர்கீஸ். இவர்களது வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த திமிங்கல உமிழ் நீரை பறிமுதல் செய்தனர் இந்த திமிங்கலம் உமிழ்நீர் ரூ.41,55,000 மதிப்பிலானது என்று தெரிவித்தனர். மேலும் அதனை விற்க முயன்ற தங்கச்சன் மற்றும் அவரது மகன் இருவரையும் போலீசார் கைது செய்து செங்கோட்டை காவல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (22.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஏலகிரி மலையில் 3 கி.மீ நடந்து சென்ற எம்எல்ஏ… குறைகளை கூறிய மக்கள்… நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!!

ஏலகிரி மலையில் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று எம்எல்ஏ மக்களிடம் குறை கேட்டறிந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றார்கள். இங்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஏலகிரி மலையில் நடந்து வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து ஏலகிரி மலையில் ராயனேரி பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் இடத்திற்கு 3 கிலோ […]

Categories

Tech |