Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர்…. குளத்தில் குதித்து தப்பியதால் பரபரப்பு….. போலீஸ் விசாரணை…!!!

டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் குளத்தில் குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்ற போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்காமல் தகராறு செய்ததால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

களிமண்ணால் ஆன சாமி சிலைகள்…. தத்ரூபமாக செய்து அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் இருக்கும் தனியார் பள்ளியில் தெற்கு ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை, 9, 10- ஆம் வகுப்புகள் மற்றும் 11, 12- ஆம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக கருவி இசை, நாடகம், நடனம், மொழித் திறன், கவின் கலை நுண்கலை போன்ற போட்டிகள் நடைபெற்றது. அப்போது அரசு பள்ளி மாணவர்கள் களிமண்ணால் ஆன விநாயகர், முருகன் உருவத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்து…. அட்டகாசம் செய்த யானைகள்…. வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சிங்கோனா அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து பொருட்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து பள்ளி ஆய்வகத்தின் ஜன்னல் கதவுகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் வனத்துறையினரை விரட்டியதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின்வாரிய உதவி இன்ஜினியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. ஏன் தெரியுமா…? அதிரடி உத்தரவு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பாரத் நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அதற்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு கார்த்திகேயன் ஆன்லைன் மூலம் மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி இன்ஜினியர் சுப்பிரமணியன் என்பவர் மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு போர்மேன் சங்கர் கணேஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி கார்த்திகேயன் ரசாயனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி…. பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தேனாம்பேட்டை நக்கீரன் தெருவில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக இருக்கிறார். நேற்று மகளிர் சுய உதவி குழுவில் பணம் கட்டுவதற்காக புனிதா தனது வீட்டு வாசலில் அமர்ந்து பணத்தை எண்ணி கொண்டிருந்தார். அப்போது மர்ம ஒருவர் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று புனிதா மீது பெட்ரோலை ஊற்றினார். இதனால் அதிர்ச்சியடைந்த புனிதா சத்தம் போட்டுள்ளார். அப்போது மர்ம நபர் “சத்தம் போட்டால் தீ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு விமானத்தில் கடத்திய “4 அரியவகை குரங்கு குட்டிகள்”…. சுங்க இலாகா அதிகாரிகளின் முடிவு…!!!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் முகமது நஸ்ருதீன் என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது உடைமைகளை ஸ்கேன் செய்த போது ஏதோ லேசாக அசைவது போல் தெரிந்தது. இதனால் அதிகாரிகள் அவர் வைத்திருந்த பையை திறந்து பார்த்தபோது 4 அரியவகை குரங்கு குட்டிகள் இருப்பதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பாரம்பரிய நாட்டு ரக அவரை சாகுபடி…. தோட்டக்கலைத்துறை மானியம்…!!!

பாரம்பரிய நாட்டு அவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலமாக மானியம் வழங்கப்படுகின்றது. நமது முன்னோர்கள் ஒவ்வொரு மண் வளத்திற்கும் ஏற்ற வகையில் விதைகள், பருவத்திற்கேற்ற விதைகள், வரட்சியான பகுதிக்கேற்ற விதைகள் என பகுதி மற்றும் சூழலுக்கு ஏற்ப விதைகளை பயன்படுத்தி வந்தார்கள். இதனால் எந்த இழப்பும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய விவசாயத்தில் மகசூல் எந்த அளவிற்கு கிடைக்கின்றதோ அந்த அளவிற்கு பாதிப்பு கிடைக்கின்றது. ஆகையால் இயற்கையோடு இணைந்து வாழ்வதில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி… புதிதாக மையம் திறப்பு…!!!!

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்கும் படி அரசு அறிவித்ததன் பேரில் 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் அறையில் மற்றொரு கவுண்டரில் இந்த மையமானது […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! தீபத் திருவிழாவிற்கு “இதன்” பிறகே அனுமதி…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. இந்த மாவட்டத்திற்கு மட்டும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த மிளா… கயிறு கட்டி பிடித்ததில் நேர்ந்த சோகம்..!!!!

உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கின்றது. இங்கே மிளா,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இவை அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் உடன்குடி பஜார் பகுதிக்கு மிளா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விவசாயியான ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ராஜகோபாலின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுந்தகவல் மூலம் விற்பனை….. வசமாக சிக்கிய பழக்கடை வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- முதலிப்பட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பழக்கடை வைத்திருக்கும் சிவசக்தி என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை குறுந்தகவல் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சிவசக்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவசக்திக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தீவிரமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“வெளிநாட்டிற்கு போக வேண்டாம்”…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருகே காரனூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் வெளிநாடு செல்ல போவதாக செந்தில் தனது மனைவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்ததால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பாய்லர்…. தனியார் நூற்பாலையில் தீ விபத்து…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 14 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை தமிழர் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லேப் டெக்னீசியனான ரேகா(35) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரேகாவுக்கும், ராஜாசேகரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 19-ஆம் தேதி ரேகா தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரியாணி சாப்பிட்ட வாலிபர்…. மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!!

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி காலனியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அருண்குமாரை நண்பர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6- ம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த  நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். 9 ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா….!! மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…??

மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உப கோவில்களில் இருக்கும் உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் பழைய திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கையை எண்ணியுள்ளனர். இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக 1 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் தான் காரணம்…. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்….? மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் கருத்து….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகள் போன்றவற்றில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக விவாகரத்து, வறுமை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் சிறுவர்களும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. எனவே 18 வயதிற்கு கீழ் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்பது போல் நடித்து…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. 1 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கல்லம்பல் பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் நேற்று முன் தினம் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் லிஸ்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி சிவலிங்கம் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்த செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த மர்ம நபர்கள் புதுப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

#BREAKING : திருவண்ணாமலையில் டிச., 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு   டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“படிப்பதற்கு சீட் வாங்கி தருகிறேன்”…. விவசாயியிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போன் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது மகன் மனோஜ் குமாருக்கு சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படிக்க ஏற்பாடு செய்கிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். அதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என கூறியுள்ளார். அதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களே உஷார்….!! புது விதமாக மோசடி செய்யும் மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்களை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஆசிரியர்,  யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுக்காததால் வீடு இல்லை”…. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!!

முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த முதியவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் முதியவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, எனது பெயர் சிகாமணி. நான் பண்ருட்டி கீழ்மாம்பட்டை பகுதியில் வசித்து வருகிறேன். பிரதம மந்திரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா”…. வேன் கவிழ்ந்து 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த 13 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.vஅவர்கள் கொடைக்கானலில் இருக்கும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மோர்பாயிண்ட் பகுதிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்குள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய பசுமாடு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சங்கர்களம் பகுதியில் விவசாயியான சடையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த சடையப்பனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளியில் படிக்கும் போது மலர்ந்த காதல்…. கராத்தே மாஸ்டரை கரம் பிடித்த இளம்பெண்….!!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் எம்.எஸ்சி பட்டதாரியான ஜெயலட்சுமி(24) என்பவர் வசித்து வருகிறார். இவரும் பழைய சித்துவார்பட்டி சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஹரிஹரன்(24) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பள்ளியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“உனது தந்தை மதுகுடிக்க செல்கிறார்”…. சிறுமியை ஏமாற்றி தூக்கி சென்ற தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குயிலாபாளையம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழிலாளியான பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. அதே பகுதியை சேர்ந்த தம்பதியினர் வண்ணாரப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது பாலு சிறுமியிடம், உனது தந்தை மது குடிப்பதற்கு பணத்துடன் செல்கிறார்; […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த சரக்கு வாகனம்…. பட்டதாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியவீட்டுகொட்டாய் கிராமத்தில் மணிகண்டன்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தாதகவுண்டன்கொட்டாய் பகுதியில் வசிக்கும் கார்த்திக்(29), ஆனந்த்(25), கபில்(19), மூர்த்தி(16), மஞ்சுநாதன்(26) ஆகியோருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்ல நினைத்தார். அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் நாகாவதி அணையில் குளிப்பதற்காக சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர். அணையில் குளித்துவிட்டு இரவு நேரத்தில் அவர்கள் சரக்கு வாகனத்தில் நல்லம்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை மஞ்சுநாதன் ஓட்டி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அந்த 2 பேர் தான் காரணம்”…. தற்கொலைக்கு முயன்ற விவசாயி…. பரபரப்பு சம்பவம்…!!!

விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சுப்பிரமணி கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அப்போது திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை சுப்பிரமணி உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் நடத்திய விசாரணையில் சுப்பிரமணி கூறியதாவது, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

50-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் சோதனை…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் ஹோட்டல்கள், பேக்கரிகள், தள்ளுவண்டி கடைகள் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுதாகர் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த சாம்பார், 3 கிலோ அழுகிய பழங்கள், 5 கிலோ கார வகைகள், 3 கிலோ பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல் உப்பின் விலை உயரும்?… எதிர்பார்ப்பில் வியாபாரிகள்..!!!!

கல் உப்பின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தனேந்தல், திருப்பாலைக்குடி ஆகிய ஊர்களில் ஏராளமான உப்பளபாத்திகள் இருக்கின்றது. இங்கே வருடம் தோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் ஆரம்பித்திருப்பதால் உப்பளங்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாத்திகளில் சேகரித்து வைத்த கல் உப்புகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீரில் கலந்து வரும் கழிவுநீர்… நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகம்… அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!!!

குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விடிய விடிய பெய்த கனமழை… கொட்டக்குடி ஆற்றில் அதிகரித்த நீர்வரத்து..!!!

விடிய விடிய பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறு, குளம், அணைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சென்ற சில நாட்களாக மழை பெய்யவில்லை. வெயிலில் தாக்கவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் போடியில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையால் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

கனமழை எதிரொலி : 2 மாவட்டங்களுக்கு இன்று (29.11.22) விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த 29ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனை தொடர்ந்து சில நாட்களாகவே மழை பெய்யாமல் குளிர் மட்டுமே இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட […]

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

மதுரை வீரன் கோவிலை அகற்ற எதிர்ப்பு… ஆட்டையாம்பட்டி பிரிவு – மசக்காளிப்பட்டி இடையே திரண்ட மக்கள்… போக்குவரத்து பாதிப்பு..!!!!

மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாமனாரை சுட்டு கொலை செய்த “முன்னாள் ராணுவ வீரர்”….. போலீஸ் அதிரடி…!!!!

மாமனாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் இரட்டை குழல் துப்பாக்கியால் தனது மாமனார் செல்வராஜை சுட்டு கொன்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் ரவிச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து கந்தர்வகோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவிச்சந்திரன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு சென்ற கர்ப்பிணி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

ஆறு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டை பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா நல்லம்மாள்சத்திரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு பின்புறம் சென்றபோது பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்த ராதிகாவை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன் பேட்டை கிராமத்தில் மாரிமுத்து- கண்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதுடைய ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் ஏழுமலை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஏழுமலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏழுமலையின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தாத்தாவுடன் மாடு மேய்க்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலபுலியூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜெயசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தாத்தாவுடன் ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற ஜெயசக்தி ஏரியில் விளையாடி கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென ஜெய்சக்தி காணாமல் போனதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

118 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் சேலம் மாநகரில் இருக்கும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 118 பேரின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான தங்கநகை…. ரூ.25 லட்சம் மோசடி செய்த டிப்-டாப் வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பேளூர் பகுதியில் ஜெயினுலாதீன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயினுலாதீனின் கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாலிபர்கள் சென்று குறைந்த விலைக்கு தங்கமணி மாலை இருக்கிறது எனவும், 60 லட்ச ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் குரங்குசாவடி பகுதியில் நாங்கள் தங்கி இருக்கிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டிகுட்டை மேடு பகுதி சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் இருக்கிறது. நேற்று பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து சரக்கு லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில்…. விநாயகர் சிலை கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் உடைய சூடு மண்ணால் ஆன விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளில் ஓட்டையும், துதிக்கை நீண்டும் காணப்படுகிறது. சிலையின் தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுற்றுலா விசா மூலம்… இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைத்த போலி முகவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!

வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா மூலம் இளைஞர்களை அனுப்பி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி முகவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷ்பின் ராயன் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை வடபழனியில் இருக்கும் தனியார் வளாகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பி.எம்.கிசான் பயணிகள் கவனத்திற்கு…! ஆதார் எண்ணை இணைக்க 30-ம் தேதியே கடைசி… ஆட்சியர் தகவல்…!!!

கிசான் பயனாளிகள் தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணை 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் சென்ற 2018 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 வீதம் வருடத்திற்கு 6000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. நடைபாண்டில் 13வது தவணையாக டிசம்பர் முதல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை தூக்கி சென்ற தொழிலாளி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருப்பமூப்பன்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories

Tech |