Categories
மதுரை மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 28 ஆண்களுக்கு காதல் வலை வீசிய மதுரை பெண்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

மதுரையை சேர்த்த அபிநயா என்ற பெண் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல் வலை வீசி வீழ்த்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 28 ஆண்களில் நான்கு பேரை அவர் திருமணம் செய்துள்ளார். நான்காவது திருமணம் செய்பவரிடம் இருந்து 30 நாட்களில் பல சவரன் நகைகளுடனும் பணத்துடனும் தலைமறைவாகியுள்ளார். பல மாதங்களாக இதையே வாடிக்கையாக கொண்டிருந்த இவர் சமூக வலைத்தளத்தில் முதலில் நண்பராக பழகி பின்பு காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகள் முன் சீன்….. நடு ரோட்டில் அலப்பறை செய்த 2k ப்ளூ சட்டை…. தொல்ல தாங்க முடியலப்பா….!!!!!

புதுச்சேரி அடுத்த காலப்பட்டு பகுதியில் பள்ளி விடும் நேரத்தில் மாணவிகளின் முன் சாலையில் தண்டால் எடுத்து சாகசம் செய்யும் வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதுச்சேரி காலப்பட்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடும் நேரத்தில் சாலையில் சாகசம் செய்யும் வாலிபர்களின் ரகளை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு எதிரே இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக தண்டால் எடுப்பது போன்ற பல்வேறு சாகசங்களை காட்டியுள்ளார். இந்த வீடியோ […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்”..!!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் கூடுதலாக 50,000 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆழ்குழாய் கிணற்றிலிருந்து கருப்பு நிறத்தில் வந்த தண்ணீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் விவசாயியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார் மேலும் வீட்டு உபயோகித்திருக்கும் அந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்ததால் சீனிவாசன் கிணற்று தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். நேற்று மோட்டாரை இயக்கி கிணற்றுத் தண்ணீரை எடுத்த போது கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததை பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கந்துவட்டி வசூலா…? பேரூராட்சி துணை தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞான ஜெபின், அவரது மனைவி பெனிலா, நண்பர் அஜீமோன் ஆகிய 3 பேரும் இணைந்து கந்துவட்டி வசூலிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்…. துணிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் குழித்துறை வாவுபலி திடல் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், மற்றொருவர் மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும் தெரியவந்தது. இருவரும் இணைந்து 300 கிராம் போதை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற நண்பர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் கிராம மக்கள்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில் மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களான சின்னதுரை, வடிவேல் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்காக காவல்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கன்னிமார்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோவை சின்னதுரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே நிலக்கரி லோடு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர்….. “சித்தர்” என கூறி பணம் வசூலித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமலும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றி திரிகிறார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் யாராவது உணவு கொடுத்தால் முதியவர் அதனை வாங்கி சாப்பிடுவார். இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் எனக்கூறி நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். மேலும் முதியவருக்கு அருகே அவர்கள் ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் அலறி சத்தம் போட்ட ஆடுகள்…. நிம்மதியின்றி தவிக்கும் விவசாயிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன், 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார் கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டதால் சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 16 ஆடுகள் கழுத்து, முதுகு பகுதிகளில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த சக்திவேல் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிராம உதவியாளர் பணி… நாளை எழுத்து தேர்வு… ஆட்சியர் தகவல்..!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு நாளை எழுத்து தேர்வு நடக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தாசில்தார்கள் மூலம் கூறாய்வு செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக நாளை எழுத்து தேர்வு மாவட்டத்தில் 10 இடங்களில் நடைபெறுகின்றது. அவை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வட சென்னையின் அடையாளம்… ரசிகர்களிடமிருந்து விடைபெற்ற அகஸ்தியா தியேட்டர்…!!!

பழமை வாய்ந்த அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை 1967-ம் வருடம் திறக்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் என்பதால் பெண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிக்கு வருவார்கள். அவர்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட்டது. இந்த திரையரங்கில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் தொடங்கி தற்போதைய நடிகர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்படை தினத்தையொட்டி… மாணவர்கள் கப்பலில் பயணம்… ஆயுத படையில் சேர ஊக்குவிப்பு..!!!!

கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அந்த வகையில் சென்னையில் இருக்கும் நான்கு பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் கடற்கரைக்கு சொந்தமான காப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது மாணவர்களுக்கு ஆயுதப்படையில் சேர்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நீர் வழிபாதை ஆக்கிரமிப்பு”… பயிர்கள் சேதமாகி நஷ்டம்… ஆர்.டி.ஓ -விடம் விவசாயிகள் மனு…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த  விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் ஒன்று சின்னக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் சின்னக்கம்பாளையம் கிராமம் பாதை வழியாக சின்ன புத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சபட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலக்கிறது. இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக செல்லும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடகடவுளே.. மகளுடன் தற்கொலைக்கு முயன்ற தம்பதி…. தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு!!!…….

குலசேகரன்பட்டினத்தில் குடும்ப தகராறு காரணமாக மூன்று பேர் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் அருகே சிறுநாடார் குடியிருப்பு என்னும் பகுதி அமைந்துள்ளது. சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் ரகுபதி (55) – சத்தியவாணி (50) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா (27) என்ற மகள் உள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக சென்னையைச் சேர்ந்த ஹரிகர சுதன் என்பவருடன் சந்தியாவிற்கு திருமணம் நடைபெற்றது. இதில்  ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரூ.9-க்கு ரசீது தர மறுப்பு…. பல்பொருள் அங்காடிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் தெருவில் லாவண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு விழுப்புரம் பாகர்ஷா தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்று 992 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் 1001 ரூபாயை வாங்கிக் கொண்டு 992 ரூபாய்க்கு ரசீது கொடுத்தனர். இது குறித்து லாவண்யா கேட்டபோது பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 9 ரூபாய் சேர்த்து பெற்றுக் கொண்டதாக கடை ஊழியர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த மினிலாரி…. உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் நடவடிக்கை…!!!

மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மினி லாரியில் கனரக வாகனத்திற்கான இன்ஜின் பாகத்தை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யார்- திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. ஹெல்மெட் சரியாக அணியாததால் இளம்பெண் பலி…. கோர விபத்து…!!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஏஞ்சலின்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஏஞ்சலின் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற கார் ஏஞ்சலினின் இருசக்கர வாகனம் மீது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் கொடுக்க முடியவில்லை”…. குழந்தை பிறந்த 40 நாட்களில் இளம்பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3-வது தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் பிவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பி.பி.ஏ பட்டதாரியான ஆஷா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஷாவுக்கு புழல் சக்திவேல் நகரை சேர்ந்த அமீன் பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் சிறுத்தை…. கல்லூரி மாணவி படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 25-ஆம் தேதி சிறுத்தை தாக்க முயன்ட்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் கூடலூர் அரசு கல்லூரியில் சுசிலா(18) என்பவர் படித்து வருகிறார். மாலை நேரத்தில் சுசீலா கூடலூரில் இருக்கும் ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்தது வருகிறார். கடந்த 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.1 செலுத்துமாறு கூறிய நபர்…. தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ. 11 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்கு சொந்தமான சோலார் பல்புகள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் இருக்கிறது. அங்குள்ள மேலாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து சோலார் பல்புகள், அதன் விலை விவரங்கள் தெரிய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தினர் அவரின் செல்போன் எண்ணிற்கு விவரங்களை அனுப்பி வைத்தனர். மீண்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூகுள் மேப்பை பார்த்து லாரி ஓட்டிய டிரைவர்…. கடலூர் பேருந்து நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குறுக்கு வழியை தேடிய முருகன் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். அதன்படி கூகுள் மேப் மூலம் முருகன் புதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அப்போது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட காண்ட்டிராக்டரை சித்திரவதை செய்து…. ரூ.5 லட்சம், நகை பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தாஜூதீன்(33) என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் கோவை கணபதி பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி இருந்து கட்டிடப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று தாஜூதீன் தனது தந்தை அப்துல்லாவுடன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தாஜூதீனின் உடலில் கம்பியால் தாக்கிய காயங்களும், சூடு வைத்த அடையாளங்களும் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் விசாரித்த போது, மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்து பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தானாக ஓடிய அரசு பேருந்து…. அபய குரல் எழுப்பிய மாணவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு சுப்ரமணிய சிவா பேருந்து நிலையத்தில் கொடைரோடு செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வந்த மற்றொரு பேருந்து கொடைரோடு செல்வதற்காக நின்ற அரசு பேருந்து மீது மோதியது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்வதை பார்த்த மாணவிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு ஓடி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஜோதிடம் பார்க்க சென்ற மனைவி…. அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 14 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மான் இறைச்சி சமைத்து விற்பனை…. ஹோட்டல் மேலாளர் உள்பட 3 பேர் கைது…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குள்ளட்டி வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டலில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிசலூரை சேர்ந்த மல்லேசன், மாதேஷ் ஆகியோர் ஹோட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் வனகோட்டை வனக்காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது பிரசாந்த், மல்லேசன், மாதேஷ் ஆகிய 3 பேரும் இணைந்து மான்களை வேட்டையாடி ஹோட்டலில் சமைத்து விற்பனை செய்தது […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண….. நாளை முதல் டிக்கெட் வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயின்றி தவித்த ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டும் நாய்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டதால் தாய் ஆடு பரிதாபமாக இறந்தது. இதனால் குடிக்க பாலின்றி தவித்த 3 ஆட்டுக்குட்டிகளையும் சக்திவேல் திருமலைபுரத்தில் வசிக்கும் பதினெட்டு என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார். அவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆனால் அந்த 3 குட்டிகளுக்கும் பிற ஆடுகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தைகளுடன் தலைமறைவான பெண்…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தனது மனைவி உமாதேவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பவர் உமாதேவி 9 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா..! திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ரூ 5,000 க்கு விற்பனை…. விவசாயிகள் கவலை..!!

திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான  தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு…. நேர்முகத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு நிறுவனங்களில் 201 விற்பனையாளர் மற்றும் 30 கட்டுனர் பணியிடங்கள் உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விற்பனையாளர், கட்டுனர் பணியிடங்களுக் கான நேர்முகத்தேர்வு 12ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. எனவே, நேர்முகத்தேர்வுக்கான அனுமதிச் சீட்டு 2ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் திருச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு… சிஎஸ்ஐ பள்ளியில் முகாம்..!!!

போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தாராபுரம் வட்டம் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் தலைமை தாங்கி உரையாற்றினார்கள். அவர்கள் சட்டம் மற்றும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புதிய தார் சாலை அமைக்கும் பணி… தொடங்கி வைத்த எம்.எல்.ஏ..!!!

புதிய தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் அருகே இருக்கும் முக்காணி ரவுண்டானா அருகில் இருந்து கொற்கை விலக்கு வரை புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 1 1/4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை ஏற்று கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், திமுக செயலாளர், யூனியன் கவுன்சிலர், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட பூமி பூஜை… பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை போட எரிவழி குழாய் பதிக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இங்கு எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலையும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில்… பாறைகளை அகற்ற வேண்டும்… வாகன ஓட்டிகள் கோரிக்கை..!!!

விபத்து ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் லோயர் கேம்ப் இருக்கின்றது. இங்கே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் இருக்கின்றது. குமிளி செல்வதற்கு வனப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்திருக்கின்றது. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் சாலைகள் குறுக்கலாகவும் இருக்கின்றது. சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு செல்லும் நிலையில் இருக்கின்றது. அதில் இரண்டாவது மேம்பாலத்திலிருந்து […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர்… 12 சதவீதம் அதிகரிப்பு… முதன்மை தலைமை ஆணையர் தகவல்..!!!

தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மீண்டும் ரயில்களில் கட்டண சலுகை கிடைக்குமா…?” எதிர்பார்ப்பில் வீரர், வீராங்கனைகள்..!!!!

ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது. இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைதிகளுடன் உறவினர்கள் பேச… சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் வசதி… பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..!!!!

கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்கு சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் தொலைபேசி வசதி செய்யப்பட்டு இருக்கின்றது. சேலம் மத்திய சிறைச்சாலையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் இருக்கும் கைதிகளை சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் கொடுக்கும் மனுக்களின் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்போது கைதிகள் ஒருபுறமும் உறவினர்கள், வக்கீல்கள் மற்றொருபுறமும் நின்று பேசுகின்றார்கள். இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் இருதரப்பினரும் கத்தி பேசுகின்றனர். இந்நிலையில் கம்பி வலையில் உள்ளே இருக்கும் கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து பேசும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை…. …. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும்  திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி…. இளம்பெண்ணிடம் தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கம்”…. ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கள்ளக்குறிச்சியில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் கல்வராயன் மலை அடிவாரப்பகுதியான புதுப்பட்டு, மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பேருந்து மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் வேறு வழி இல்லாமல் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள வி.மலம்பட்டி பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வள்ளியப்பன்(20), சின்னையா(17), விஜயகுமார்(15) ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வழக்கம் போல காலை 7 மணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். இதனையடுத்து காலை உணவு இடைவேளையின் போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 7-வது ஆண்டாக சாதனை…. சிங்கம்புணரி அரசு பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனத்தில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 35 மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் 23 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் தொடர்ந்து 7-வது வருடமாக முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய கார்…. தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதிகள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அதிரப்பட்டி கிராமத்தில் நாகராஜ்-முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகராஜ் அவரது மனைவி, மகன் கிருஷ்ணமூர்த்தி, மருமகள் தேன்மொழி ஆகியோர் சொந்த வேலை காரணமாக 2 மோட்டார் சைக்கிள்களில் விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ராமகவுண்டம்பட்டி அருகே சென்ற போது திருச்சி நோக்கி வேகமாக சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மீது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உரிய விலை இல்லாததால் நடு ரோட்டில் கொட்டப்பட்ட வெண்டைக்காய்… விவசாயிகள் வேதனை…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் பகுதியில் வெண்டைக்காய்கள்  பயிரிடப்படுகிறது.  இந்த வெண்டைக்காய்களை விவசாயிகள்  மொத்த காய்கறி சந்தைகளில் விற்பனை செய்யவது வழக்கம். இந்நிலையில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். இதனையடுத்து காய்கறி மற்றும் பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே…. பேருந்துகளில் சேவை குறைபாடு இருந்தால்…. இந்த நம்பரில் புகார் செய்யலாம்….!!!!

தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்ட வருகின்றன. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பயணிகளின் குறைகளையும் அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் சேலம் கோட்டை அரசு பேருந்துகளில் சேவை குறைபாடுகளை 9489203900 என்ற whatsapp எண்ணில் பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிக்கட்டில் பயணம், பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்திற்கு மீதி சில்லரை வழங்காமல் இழுத்தடிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முளைச்சாவு அடைந்த வாலிபர்…. உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….!!!!

முளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் டேங்க் ரோடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் படித்து முடித்த விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் உறவினர் மகளான சாலினியை கல்லூரியில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சிந்தாமணி அருகே சென்ற போது எதிரே வில்லிவாக்கத்தைச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயதில் தாயை இழந்த வாலிபர்….. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சிதா என்ற மகளும் ராஜி(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் ராஜி சென்னை பூக்கடை பகுதியில் தள்ளு வண்டியில் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் இறந்ததிலிருந்தே மன உளைச்சலில் இருந்த ராஜி கடந்த  ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி…. மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங்கு(30), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன்(27) ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ராஜா மயங்கி கிடப்பதாக குகனும், தேசிங்குவும் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரபல சுற்றுலா நிறுவனத்தின் பெயரில்…. பல லட்ச ரூபாய் மோசடி…. இன்ஜினியர் அளித்த பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் சிட்கோவை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு ரவிசங்கரின் டெலிகிராம் முகவரிக்கு அமெரிக்க சுற்றுலா நிறுவனமான ஹயாத் என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை ரவிசங்கர் தொடர்பு கொண்டு பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் எங்களது நிறுவனம் குறித்து கருத்துக்களை பதிவிட்டு பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை […]

Categories

Tech |