கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் தண்டபாணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 5 மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லூர் மணிமுத்தா ஆற்றை மாடுகளுடன் கடக்க முயன்ற போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டபாணி ஆற்றின் நடவே இருக்கும் மணல் திட்டில் மாடுகளுடன் சிக்கிக்கொண்டு என்ன செய்வது என அறியாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் கயிறு கட்டி தண்டபாணியையும், 5 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, மணிமுத்தா […]