ஈரோட்டில் 15கோடி வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]
