பொய் வழக்குப்போட்டு நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றியைத் தடுக்க காவல் துறை முயற்சி செய்வதாக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்குநேரியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியைச் சாராதவர்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி கலங்குடி என்ற இடத்தில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி எச். வசந்தகுமார், அவருடன் வந்த நான்கு பேரை காவல் துறையினர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, […]
