காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் செம்பாலா தனியார் தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் கூடலூர் வ.உ.சி நகருக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை போன்ற மரங்களை முறித்து தின்றுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு ஜன்னல் […]
