சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி எட்டின்ஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் சிவகுமாரை கைது […]
