தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர். இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, […]
