அக்காள் கணவர் உட்பட பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 14 வயது சிறுமி தொடர்ந்து பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதில் நிறைமாத கர்ப்பமான அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவலளித்தது.. […]
